Sunday, October 29, 2023
வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர்
வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் அறிவியல் பாடம் படிப்பித்துக்கொண்டிருந்தார்.
அப்போது “ஆங்கிலேயர் நீராவியில் இருந்து ரயில் எஞ்சின் கண்டு பிடித்தனர். தமிழர்கள் ஏன் கண்டு பிடிக்கவில்லை?” எனக் கேட்டார்.
அதற்கு ஒரு மாணவன் “ சேர் ! தமிழர்கள் நீராவியில் புட்டு அவிக்க கண்டு பிடித்திருக்கின்றனரே “ என்றான்.
“சரி. அப்படியென்றால் ஆப்பிள் மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் விழுவதைப் பார்த்து நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார். தமிழர்கள் ஏன் புவியீர்ப்புவிசையைக் கண்டு பிடிக்கவில்லை?” எனக் கேட்டார் ஆசிரியர்.
அதற்கு ஒரு மாணவன் “ சேர்! தமிழர் பிரதேசத்தில் ஆப்பிள் மரம் இல்லை. அதனால் கண்டு பிடிக்கவில்லை” என்றான்.
ஆசிரியர் சிரித்துவிட்டு “பனை மரத்தில் இருந்து பனங்காய் விழுகிறதுதானே? அதைப் பார்த்து கண்டு பிடித்திருக்கலாம்தானே” எனக் கேட்டார்.
மாணவர்கள் பதில் கூறவில்லை. அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.
அப்போது ஆசிரியர் “ ஆப்பிள் பழம் மேலே போகாமல் ஏன் கீழே விழுகிறது என்று நீயூட்டன் தனக்குள் கேள்வி எழுப்பியதாலே அவரால் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடிக்க முடிந்தது” என்றார்.
மேலும் ஆசிரியர் “எனவே நீங்களும் எப்போதும் கேள்வியை எழுப்புங்கள். நீங்களும் விஞ்ஞானியாகலாம்” என்றார்.
இதைக் கேட்ட மாணவன் ஒருவன் எழுந்து “ஒரு கேள்வி கேட்கலாமா சேர்” என்றான்.
ஆசிரியர் மிக்க மகிழ்ச்சியுடன் “தாராளமாக கேளு” என்றார்.
“சம்பந்தர் ஐயா எப்போது உறக்கத்தில் இருந்து எழும்புவார்? அவர் எப்போது தமிழருக்கு தீர்வு பெற்று தருவார்? “ என்று கேட்டான்.
இந்த கேள்வியை எதிர்பார்க்காத ஆசிரியர் எஸ்கேப். அதன் பிறகு அவர் எந்த மாணவர்களிடமும் கேள்வி கேளுங்கள் என்று கூறுவதில்லை.
குறிப்பு –
(1)அந்த ஆசிரியர் நான் இல்லை😂😂
(2) மாணவனின் கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் தாராளமாக கீழே எழுதலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment