Saturday, May 25, 2024
உலக மக்கள் தொகை 700 கோடி.
உலக மக்கள் தொகை 700 கோடி. ஆனால் 1200 கோடி மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது.
உணவு இன்றி எந்த மனிதனும் பட்டினி இருக்கவில்லை. மாறாக உணவை வாங்க பணம் இன்றியே மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
இலங்கையிலும் தேவையான அளவு உணவு இருந்தும் அதை வாங்க பணம் இன்மையினாலே மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
நாட்டில் வறுமைக்கு புலிகளே காரணம் என்றார்கள். புலிகளை அழித்தால் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றார்கள்.
ஆனால் யுத்தம் முடிந்து 15 வருடமாகி விட்டது. மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லையே.
வறுமை காரணமாக தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த தாய் பற்றி செய்தி வருகிறது.
விபச்சாரம் செய்த பெண்கள் கைது என்று தினமும் செய்திகள் வருகின்றன.
ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது யாரும் பட்டினியால் இறந்தாக செய்திகள் வரவில்லை. யாரும் வறுமையினால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை.
இன்று சிறுவர் பாலியலில் இலங்கை உலகில் முதலிடம் வகிக்கிறது.
யுத்த காலத்தில் கூட இந்த நிலை இருக்கவில்லையே? யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பின்பும் ஏன் இந்த நிலை?
வறுமை காரணமாக பெற்ற தாயே தன் மகளை விபச்சாரத்தில் தள்ளியதாக வழக்கு வந்ததே. இது அரசுக்கு வெட்கம் இல்லையா?
யுத்த காலத்தில் ஒதுக்கிய நிதியை விட அதிக நிதியை ராணுவத்திற்கு இந்த அரசு பட்ஜட்டில் ஒதுக்குகிறதே. அது ஏன்?
மக்கள் தமக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடக்கூடாது என்பதற்காக இன ஒடுக்குறையைக் கையாண்டு இனங்களை பிரிக்கிறது இந்த அரசு.
அரசே தீவிரவாதங்களை உருவாக்கிறது. அப்புறம் வறுமைக்கு காரணம் தீவிரவாதம் என்று அரசே கூறுகிறது.
மக்கள் இந்த உண்மையை உணர வேண்டும். இதற்கு எதிராக ஒருமித்து போராட வேண்டும். வறுமையில் இருந்து விடுபட இதுவே வழி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment