Saturday, May 25, 2024
ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில்
ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும்போது எல்லோர் முன்னிலையிலும் முழு நிர்வாணமாக்கி சோதனை செய்வார்கள்.
சோதனை செய்தபின் கையில் வைத்திருக்கும் கம்பால் நாலு அடி போடுவார்கள்.
இந்த அடிக்கு “அட்மிஷன் அடி” என்று பெயர். இந்த நடைமுறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடக்கிறது
பெரும்பாலும் இந்த அடியில் காயம் வராது. ஆனால் ஒருவருக்கு காயம் ஏற்படுமளவுக்கு அடிக்க வேண்டும் என அதிகாரிகள் நினைத்தால் சக ரவுடி கைதிகளை ஏவிவிடுவார்கள்.
ஆனால் சவுக்கு சங்கருக்கு சிறை அதிகாரிகளும் காவலர்களும் கும்பலாக சேர்ந்து அடித்து எலும்பு முறித்துள்ளனர்
நீதிமன்ற காவலில் உள்ள சவுக்கு சங்கரை இப்படி சிறை அதிகாரிகள் தாக்கியிருப்பது சட்ட விரோதம்.
ஆனால் காவல்துறையினர் இப்படி சட்டவிரோதமாக நடந்துகொள்வது சவுக்கு சங்கருக்கு நன்கு தெரியும்.
இருந்தும் சவுக்கு சங்கர் காவல்துறையினரை நியாயப்படுத்தி வந்தார்.
இப்போது அதே காவல்துறைதான். சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு போட்டு சட்ட விரோதமாக நடத்துகிறது.
இம்முறை சிறை அவருக்கு நல்ல பாடத்தை நிச்சயம் கற்றுக்கொடுக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment