Friday, May 31, 2024
ஜீ டிவியில் ஒளிபரப்பாகும்
ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் “சரிகமப” ஒரு பாட்டு நிகழ்ச்சிதான். அதுவும் வியாபார நிகழ்ச்சிதான்.
ஆனாலும் அண்மை காலங்களில் கமரா வெளிச்சம் படாத பல திறமையாளர்களை கண்டு பிடித்து வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.
அதுவும் குறிப்பாக உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2009க்கு முன்னர் சன் டிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் அகதி முகாமில் வாழும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பங்கு பற்றினார்.
அவர் ஒரு அகதி இளைஞர் என்பதை தெரிந்துகொண்டதும் உடனடியாக எந்த காரணமும் கூறாமல் நிகழ்ச்சியில் இருந்து நீக்கியிருந்தார்கள்.
2009 வரை தமிழக தொலைக்காட்சிகளில் ஈழத் தமிழருக்கான இடம் இப்படித்தான் இருந்தது.
ஆனால் இந்தப்போக்கு இப்போது மாறி வருகிறது. ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுப்பது மட்டுமன்றி அவர்கள் பட்ட வலிகளை கூறுவதற்கும்கூட வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இம்முறை இந்த சரிகமப நிகழ்வில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவெனில் மலேசியா பாடகி அருளினிக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும்.
ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் “இந் நோய் பலவீனம் அல்ல. ஒரு பலம் என்று காட்டுவதற்காக வந்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.
அவர் இம்முறை வெல்ல வேண்டும். அவருடைய வெற்றி ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment