Sunday, August 31, 2014

அரசியல் நாவல் கருத்தரங்கு

லண்டன் ஈஸ்ட்காமில் நடைபெற்ற “அரசியல் நாவல் கருத்தரங்கு”

நேற்று (30.08.2014) யமுனா ராஜேந்திரன் தலைமையில் “தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்”, “விம்பம்” மற்றும் “எனில்” ஆகியவற்றின் ஆதரவில் முழு நாள் உரையாடல் நிகழ்வாக இவ் அரசியல் நாவல் கருத்தரங்கு நடைபெற்றது.

• இலக்கிய ஆர்வலர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவ் உரையாடல் நிகழ்வு கிருஸ்ணராஜா அவர்களினால் பறை இசையுடன் ஆரம்பமானது.

• முதலாவதாக வேலு அவர்கள் பாரதிநாதன் எழுதிய “தறியுடன்” நாவல் குறித்த தனது கருத்துகளை முன்வைத்தார்.

• இரண்டாவதாக சேனன் அவர்கள் லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய “கானகன்” நாவல் குறித்த தனது கருத்துகளை தெரிவித்தார்.

• மூன்றாவதாக கால்மாக்ஸ் அவர்கள் இரா.முருகவேல் எழுதிய “மிளிர்கல்” நாவல் குறித்து தனது கருத்துகளை முன்வைத்தார்.

மேற்குறிப்பிட்ட மூன்று நாவல்களும் இந்திய தமிழ் அரசியல் நாவல்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஈழத்து தமிழ் அரசியல் நாவல்கள் நான்கு பற்றி உரையாடப்பட்டன.

• முதலாவதாக தமிழ்கவி அவர்கள் எழுதிய “ஊழிக்காலம்” பற்றி டென்மார்க்கில் இருந்து வந்திருந்த ஆதவன் அவர்கள் தனது கருத்துகளை தெரிவித்தார்.

• இரண்டாவதாக குணா கவியழகன் எழுதிய “நஞ்சுண்ட காடு” நாவல் குறித்து சுவிற்சலாந்தில் இருந்து வந்த சயந்தன் அவர்கள் தனது கருத்துகளை முன்வைத்தார்.

• மூன்றாவதாக நௌசாத் அவர்கள் எழுதிய “கொல்வதெழுதல் 90” என்னும் நாவல் குறித்து பக்திக் அபூபக்கர் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

• நான்காவதாக ஸர்மிளா ஸெய்யித் அவர்கள் எழுதிய “உம்மத்” நாவல் குறித்து மாதுமை அவர்களின் கருத்துகளை அவர் வரமுடியாமையினால் நீசா அவர்கள் சபையில் வாசித்தார்.

மதிய போசன இடை வேளைக்கு பின்பு சுஜித்ஜி இயக்கிய “மாசிலன்” குறும்படம் காண்பிக்கப்பட்டது.

அதன் பின்பு பௌசர் இன் வழிப்படுத்தலில் உரையாடல் இடம்பெற்றது. பார்வையாளர்களின் வினாக்கள் மற்றும் கருத்துகளுக்கு சம்பந்தப்பட்ட பேச்சாளர்கள் பதில் அளித்து பேசினார்கள்.

இறுதியாக 4.30 மணியளவில் கருத்தரங்கு நிறைவு பெற்றது.

குறிப்பு-

(1)மிகவும் பயன் மிக்க ஒரு இலக்கிய உரையாடல் நிகழ்வை நடத்திய ஏற்பாட்டாளர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

(2)தொடர்ந்தும் இது போன்ற காத்திரமான பங்களிப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

(3)அவர்களது அனைவரின் இலக்கிய உழைப்பிற்கும் பங்களிப்பிற்கும் வாழ்த்துகள்.

Photo: லண்டன் ஈஸ்ட்காமில் நடைபெற்ற “அரசியல் நாவல் கருத்தரங்கு”

No comments:

Post a Comment