• சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்
செங்கொடி வீர வணக்க நிகழ்வில் தோழர் தமிழரசன் அவர்களின் தாயாரை மேடையேற்றி கௌரவித்த “நாம்தமிழர்” கட்சி தலைவர் சீமான் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சீமான் அவர்களின் அரசியல் குறித்து எமக்கு விமர்சனம் இருப்பினும் தோழர் தமிழரசனை நினைவு கூரும் வண்ணம் அவரது தாயாரை மேடையேற்றி மரியாதை அளிக்கப்பட்டது உண்மையிலே பாராட்டப்படவேண்டியது.
தோழர் தமிழரசனுடன் பழகியவர்களே அவருடைய பெயரை உச்சரிக்க தயங்குகின்ற நிலையில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தோழர் தமிழரசன் பெயரை பொறிக்க அய்யா நெடுமாறனே தயங்குகின்ற நிலையில், சீமான் அவர்கள் தோழர் தமிழரசனை நினைவு கூரும் வண்ணம் செயற்பட்டமை நிச்சயம் பாராட்டுக்குரியது.
மக்கள் மத்தியில் தனது மகன் தமிழரசன் நினைவு கூரப்படுவது நிச்சயம் அத் தாயாருக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். தனது மகன் கொள்ளைக்காரன் என பழி சுமத்தப்பட்டு பொலிசாரால் கொல்லப்பட்டுவிட்டானே என்ற ஏக்கம் அத் தாயை இத்தனை நாள் வாட்டியிருக்கும்.
தோழர் தமிழரசனுக்கு ஒரு நினைவு சின்னம் தனது இருப்பிடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பது அத் தயாரின் நீண்டநாள் விருப்பம். அவரது அந்த விருப்பம் இன்னும் நிறைவேற வில்லையென்றாலும் அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக தோழர் தமிழரசனை நினைவு கூர ஆரம்பித்திருப்பது அவருக்கு நிச்சயம் மன நிறைவைக் கொடுக்கும்.
அந்தவிதத்தில் அத் தயாரை கௌரவித்த சீமான் அவர்களின் செயற்பாடு வரலாற்றில் என்றென்றும் நன்றியுடன் நினைவில் நிறுத்தப்படும்.

No comments:
Post a Comment