நடிகர் விஜய் அவர்களின் (நடிப்பு) பேச்சு!
செய்தி:- முதல்வரை இழிவுபடுத்தியதை என் தாயை தப்பாக பேசியமாதிரி நினைக்கிறேன். – விஜய் பேச்சு
அடுத்த சுப்பர்ஸ்டாராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் நடிகர் விஜய் அவர்களுக்கு திடீரென தமிழக முதல்வர் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொங்கியெழுந்து உணர்ச்சியைக் கொட்டி பேசியிருக்கிறார். ஆனால் ஜெயா அம்மையாரும் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் என்பதையும் அவர் இதுபோல் பல நடிப்புகளை பார்த்தவர் என்பதையும் நடிகர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழக அரசியலில் ஏற்கனவே பல தடவை ஜெயா அம்மையார் இழிவு படுத்தப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் வராத உணர்வு இப்போது மட்டும் நடிகர் விஜய் அவர்களுக்கு என் வந்திருக்கிறது? அப்போதெல்லாம் அது தன் தாயை இழிவு படுத்தியதாக அவர் கருதவில்லையா?
பல கோடி ரூபா செலவில் எடுக்கும் அவருடைய “கத்தி” திரைப்படம் எந்தவித சிக்கலுக்கும் ஆளாகாமல் திரையிடப்பட வேண்டும் என்றால் அதற்கு தமிழக முதல்வர் ஜெயா அம்iயாரின் ஆதரவு வேண்டும் என்பதால் இந்த உணர்வு எற்பட்டதா?
நடிகர் விஜய் அவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத உணர்வு,
தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் துன்பப்படுகையில் வராத உணர்வு,
தமிழக சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளுக்காக வராத உணர்வு,
இப்போது வருகிறது என்றால் அது நிச்சயம் “கத்தி” திரைப்படத்திற்காகவே என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே விஜய் அவர்களே!
உங்கள் நடிப்பு திறமையை திரைப்படத்தில் மட்டும் காட்டுங்கள்.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு காட்ட வேண்டாம்!

No comments:
Post a Comment