கவிஞர் தேவஅபிராவுடனான சந்திப்பு
நேற்று (09.08.2014) லண்டன் ஈஸ்ட்காம் நகரில் கவிஞர் தேவஅபிராவுடனான சந்திப்பு இடம்பெற்றது. அவருடைய “இருள் தின்ற ஈழம்” கவிதை தொகுப்பு அறிமுகமும் கலந்துரையாடலும் “சரிநிகர்” ஆசிரியர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
“சரிநிகர்” சிவகுமார் கேட்டுக்கொண்டதற்கிணங்க முள்ளிவாயக்கால் மற்றும் பாலஸ்தீனத்தில் உயிர் இழந்தவர்கள் குறித்து ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் ஆரம்பமானது. ஆதனைத் தொடர்ந்து சிவகுமார் தனது அறிமுக உரையில் தேவஅபிரா கவிதையையும் பாலஸ்தீன கவிதை ஒன்றுடன் ஒப்பிட்டு இரு சமூகங்களுக்கிடையில் நிலவிய சூழலையும் ஒப்பிட்டு பேசினார்.
அதன் பின்னர் கோகுலரூபன் அவர்கள் தேவஅபிராவின் கவிதைத் தொகுப்பு பற்றிய தனது கருத்துரையை வழங்கினார். சுருக்கமான அதேவேளையில் காத்திரமான உரையை அவர் நிகழ்த்தினார். இந்த கவிதை தொகுப்பு பற்றிய தனது விமர்சனத்தை எழுத்து வடிவில் விரிவாக விரைவில் முன்வைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
இறுதியாக கவிஞர் தேவஅபிரா அவர்கள் தன் அனுபவங்களையும் பார்வையாளர்களின் கருத்துகளுக்கு தனது விளக்கங்களையும் வழங்கினார். மிகவும் பொறுமையாக தன்னிலை விளக்கத்தை அவர் அளித்தமை பாராட்டப்படவேண்டியது.
பார்வையாளராக வந்திருந்த திரைப்பட விமர்சகர் யமுனாராஜேந்திரன் அவர்கள் நீண்டதொரு விமர்சனத்தை முன்வைத்தார். அவர் தேவஅபிரா மீது மட்டுமன்றி ஈழத்து கவிஞர்கள் பலர் மீதும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பார்வையாளராக வந்திருந்த நடராஜா குருபரன் அவர்கள் தேவஅபிரா எந்தளவு நெருக்கடிகளுக்கூடாக பயணித்து கவிதை வடித்திருக்கிறார் என்பதை சில சம்பவங்களை சுட்டிக்காட்டி விளக்கினார்.
புலம்பெயர்ந்த நாடுகளில் காத்திரமான இலக்கிய பங்களிப்புகள் இல்லையே என்ற சிலருடைய ஆதங்கத்தை போக்கும் வண்ணம் இந்த கூட்டம் இடம்பெற்றது என்பதில் சந்தேகம் இல்லை. அந்தளவில் கவிஞர் தேவஅபிராவும் மற்றும் இவ் நிகழ்வு ஏற்பாட்டாளர்களும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே!

No comments:
Post a Comment