அமெரிக்காவுக்கு வருகை தரும் காவல்துறை அதிகாரி சைலேந்திபாபுவிடம் யாராவது தமிழ் உணர்வாளர் பின்வரும் கேள்விகளை கேட்பாரா?
எதிர்வரும் 31.07.2014 யன்று காவல்துறை கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு அவர்கள் அமெரிக்க தமிழ் சங்கத்தில் உரையாற்ற உள்ளார். அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் உள்ளார் என அறிகிறோம். எனவே யாராவது தமிழ் இன உணர்வாளர்கள் அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும் என விரும்புகிறோம்.
1993ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக சைலேந்திரபாபு இருந்தபோது வேடசந்தூர் என்னும் இடத்தில் நாகராசன் என்னும் தமிழ்நாடுவிடுதலை போராளி ஒருவரை “போலி என்கவுண்டர்”மூலம் கொன்றது ஏன்?
அண்மையில் தர்மபுரியில் 6 இளைஞர்கள் மரீனா கடற்கரையில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது பொய்யான குற்றச்சாட்டு என்று உண்மை அறியும் குழு, பத்திரிகைகள், மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. வேலூர் காவல்துறை கண்காணிப்hளரும் இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசோ அல்லது தமிழ்நாடு காவல்துறையோ இதுவரை இந்த குற்றச்சாட்டை வாபஸ் பெறவில்லை. எனவே இது குறித்து சைலேந்திரபாபு நடவடிக்கை எடுப்பாரா?
தமிழ்நாட்டில் அப்பாவி அகதிகள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். அங்கு காவல்பரியும் காவல்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக செயற்படுவதுடன் அகதிகளை கெட்ட வார்த்தைகளால் ஏசியும் அடித்தும் துன்புறுத்துகின்றனர். இதை சைலேந்திராபாபு கவனத்தில் கொண்டு அந்த அகதிகள் விடுதலைக்கு வழி செய்வாரா?
யாராவது ஒரு தமிழ் இன உணர்வாளர் இந்த கேள்விகளை கண்காணிப்பாளர் சைலேந்திரபாபுவிடம் கேட்கவேண்டும். இது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதியை பெறுவதற்கு உதவி புரியும் என நம்புகிறோம்.

No comments:
Post a Comment