•பாவம் வித்யா!
அவருக்காக பரிதாபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
அவருக்காக பரிதாபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
இரு தமிழ் மாணவிகள் அரகேற்றம்
பல லட்சம் ரூபா செலவில் நடந்துள்ளது.
ஜனாபதி , பிரதமர் எல்லாம் நேரில் வாழ்த்தியுள்ளார்கள்.
பல லட்சம் ரூபா செலவில் நடந்துள்ளது.
ஜனாபதி , பிரதமர் எல்லாம் நேரில் வாழ்த்தியுள்ளார்கள்.
நம்ம வாழ்நாள் வீரர் சம்பந்தர் அய்யாவும்
தவறாமல் சென்று வாழ்த்தியுள்ளார்.
தவறாமல் சென்று வாழ்த்தியுள்ளார்.
அந்த மாணவிகளின் அம்மா அமைச்சர் விஜயகலா.
அந்த மாணவிகளின் அப்பா எம்.பி யாக இருந்த மகேஸ்வரன்.
அந்த மாணவிகளின் அப்பா எம்.பி யாக இருந்த மகேஸ்வரன்.
வித்யாவும் தமிழ் மாணவிதான். ஆனால்
வித்யாவின் அம்மா அமைச்சராக இல்லை
வித்யாவின் அம்மா அமைச்சராக இல்லை
வித்யாவின் அப்பா எம்.பி யாக இருக்கவில்லை
வித்யாவின் அப்பா மண்ணென்ணெய் கடத்தவில்லை
இருந்தாலும் வித்தியா நன்கு படிக்க விரும்பினார்.
ஆனால் வித்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்
வித்யா கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
வித்யாவுக்கும் ஜனாதிபதி வந்தார்
விரைவில் நியாயம் கிடைக்க செய்வேன் என்றார்.
கொலையாளிகளுக்கு 3 பெரிய வழக்கறிஞர்கள் ஆஜர்.
ஆனால் வித்யா சார்பில் வழக்கறிஞர் யாருமே ஆஜராவில்லை.
இதைத்தான் நியாயம் வழங்குவேன் என்று ஜனாபதி கூறினாரா?
பல லட்சம் செலவு செய்து தன் மகள்களுக்கு அரகேற்றம் செய்த அமைச்சர் விஜயகலா அதில் கொஞ்சம் பணத்தை கொடுத்து ஒரு வழக்கறிஞரை வித்யாவுக்கு நியமிக்க ஏன் முனையவில்லை?
தன் மகள் அரங்கேற்றத்திற்கு ஜனாதிபதி , பிரதமர் எல்லாரையும் ஒருங்கே அழைத்து வந்த அமைச்சர் விஜயகலா வித்யாவின் கொலைக்கு நியாயம் கிடைக்க ஏன் இவர்களை சந்திக்க முனையவில்லை?
அமைச்சர் விஜயகலா மகள்களின் அரங்கேற்றத்திற்கு போன "வாழ்நாள் வீரர்" சம்பந்தர் அய்யா அவர்களால் வித்யாவுக்காக இதுவரை ஒரு அசைவுகூட ஏன் செய்ய முடியவில்லை?
ஓ! வித்யா,
என்னை மன்னித்துவிடு
உனக்காக பரிதாபப்படுவதை தவிர
வேறு எதையும் என்னால் செய்ய முடியவில்லை.
வேறு எதையும் என்னால் செய்ய முடியவில்லை.
ஆனால் ஒன்று அடுத்த பிறவியாலவது
மண்ணென்ணெய் கடத்துபவரின் மகளாக பிறந்தவிடு
மண்ணென்ணெய் கடத்துபவரின் மகளாக பிறந்தவிடு
இல்லையேல் வாழ்நாள் வீரர் சம்பந்தர் அய்யாவின் மகளாக பிறந்தால்
இந்தியாவிலாவது சொகுசாக வாழ முடியும்.
No comments:
Post a Comment