•திலீபன் மற்றும் ஈழ அகதிக்கு ஒரு நீதி
சாதி வெறி கொலைகாரர்களுக்கு இன்னொரு நீதி
இதுதான் சென்னை உயர்நீதிமன்ற நீதியா?
சாதி வெறி கொலைகாரர்களுக்கு இன்னொரு நீதி
இதுதான் சென்னை உயர்நீதிமன்ற நீதியா?
இந்திய தேசியக்கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் என்பவர் தமிழக பொலிசாரால் கை உடைக்கப்பட்டு அந்த படம் அனைத்து ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதனை ஏன் என்று கேட்கவில்லை.
அடுத்து ஈழ அகதி ஒருவர் சென்னையில் பொலிசாரால் பிடித்து செல்லப்பட்டு கால்கள் உடைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இதுவும் அனைத்து ஊடகங்களில் வந்துள்ளது. இதற்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏன் என்று கேட்கவில்லை.
ஆனால் உடுமலையில் தலித் இளைஞரைக் கொன்ற சாதி வெறிக் கொலைகாரர்களை ஜட்டியுடன் படம் பிடித்து பத்திரிகைகளுக்கு கொடுத்தவுடன் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உடனே பொலிசாரிடம் விளக்கம் கேட்டுள்ளார்கள்.
இங்கு எனது கேள்வி என்னவென்றால் காவலில் உள்ள நபரை இப்படி படம் பிடித்து பத்திரிகையில் போடுவது தவறு என்றால் இந்த நீதிபதிகள் ஏன் திலீபனுக்கு நடந்தபோது கேட்கவில்லை? ஏன் ஈழ அகதிக்கு நடந்தபோது கேட்கவில்லை?
திலீபனுக்கும் ஈழ அகதிக்கும் நடந்தபோதே இவ் நீதிபதிகள் இவ்வாறு கேட்டிருந்தால் இப்போது இந்த சாதி வெறிக் கொலைகாரர்களுக்கு இப்படி நடந்திருக்காது அல்லவா!
இந்த நீதிபதிகளுக்கு மனிதனின் அடிப்படை உரிமை பொலிசாரால் மீறப்படுவது குறித்து அக்கறை இல்லை. மாறாக தமது மதம் மற்றும் சாதிய உணர்வுகளின் அடிப்படையிலேயே செயற்படுகிறார்கள்.
ஏனெனில்அந்த கொலைகாரகளில் ஒருவர் திண்டுக்கல் இந்து முன்னனி அமைப்பாளராக இருப்பது தற்செயலானது அல்ல.
எற்கனவே அரசு மற்றும் காவல்துறையில் காவி கும்பல்களின் அதிக்கம் அதிகரித்துவிட்டது. தற்போது அது நீதித்துறையிலும் பரவ ஆரம்பித்துவிட்டது.
இந்த பாசிச ஆபத்துக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராட வேண்டிய அவசியம் தோன்றியுள்ளது.
No comments:
Post a Comment