•மங்கை அக்கா மரணம்
என்னத்தைச் சொல்லி அஞ்சலி செலுத்துவது?
என்னத்தைச் சொல்லி அஞ்சலி செலுத்துவது?
தரப்படுத்தலுக்கு எதிராக தமிழ் மாணவர்களை போராட தூண்டிவிட்டு தன் மகன் பகிரதனுக்கு இந்தியாவில் மருத்துவ கல்வி பெற்றுக் கொடுத்ததை சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,
தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி போராட வைத்தவிட்டு தன் மகன் காண்டீபனை பாதுகாப்பாக லண்டன் அனுப்பி வைத்ததைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,
தன் மகன் பகிரதன் தன் கல்வியை நிறுத்தாமலே மற்ற தமிழ் இளைஞர்களின் கல்வியைப் பாழாக்கி TENA என்ற இயக்கம் நடத்தியபோது அதற்கு ஆதரவாக மலேசியா சென்று பணம் சேகரித்ததைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,
சிங்களவனின் தோலை உரித்து செருப்பு தைக்க வேண்டும் என உணர்ச்சிப் பேச்சு பேசி இளைஞர்களை தூண்டிவிட்டதை சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,
அகதிகளாக சென்ற தமிழ்மக்கள் முகாம்களில் வாடியபோது இவர் சென்னையில் விருந்தினர் மாளிகையில் ஏசி அறையில் வாழ்ந்ததைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது
துரையப்பா, அருளம்பலம், தியாகராசா, கனகரத்தினம் ஆகியோரை துரோகி என்று முத்திரை குத்தி அவர்களை இளைஞர்கள் மூலம் சுட்டுக்கொல்லத் தூண்டியதை சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,
இலங்கை ராணவம் தமிழ் மக்களை தாக்கிய போது அதனைக் கண்டித்து கவிதை பாடியவர் இந்திய ராணுவம் தாக்கியபோது கண்டிக்கவே மறுத்துவிட்டதைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,
தன் கையால் புட்டு வாங்கித் தின்ற பிரபாகரன் நன்றி மறந்து தன் கணவர் அமிர்தலிங்கத்தைச் சுட்டுக் கொன்றார் என்று லண்டனில் மேடையில் பேசியதை சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,
தன் கணவரை தலையில் சுட்டுக் கொன்றவர் இறுதியில் தன் தலையில் வெடி வாங்கி செத்தார் என்று பிரபாகரன் மரணத்தை மேடையில் பகிரங்கமாக பேசினாரே அதைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் அதுகறித்து கவலையின்றி தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினாரே, அதைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,
பல வருடங்களுக்கு பின்னர் அவர் இலங்கை திரும்பிச் சென்ற போது முள்ளிவாய்க்கால் சென்று அஞ்சலி செலுத்தாமல் தனக்கு காவல் இருந்த சிங்கள பொலிஸ்காரர் வீடு சென்று பாராட்டினாரே, அதைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா?
எனக்கு எதைச் சொல்லி அஞ்சலி செலுத்தவது என்று தெரியவில்லை.
அவருடைய இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு என்பவர்கள் எந்த வித்தில் அது பேரிழப்பு என்பதை தயவு செய்து கொஞ்சம் கூறுங்கள்.
No comments:
Post a Comment