ரோகித வுக்கு ஒரு பார்வை.
ஈழ அகதிக்கு இன்னொரு பார்வை.
அது ஈழ அகதி தமிழன் என்பதாலா?
ஈழ அகதிக்கு இன்னொரு பார்வை.
அது ஈழ அகதி தமிழன் என்பதாலா?
பல்கலைக்கழக மாணவன ரோகித் அரச அதிகாரிகளின் தொல்லை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்தபோது முழு இந்தியாவுமே அதற்கு எதிராக குரல் கொடுத்தது. பாராளுமன்றத்தில் பல எம்.பி க்கள் இதனை கண்டித்து ரோகிதவுக்காக நியாயம் கேட்டார்கள்.
மதுரை அகதிமுகாமில் ஒரு ஈழ அகதி அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் தற்கொலை செய்துள்ளார். ஆனால் ரோகிதவுக்காக குரல் கொடுத்தவர்கள் யாருமே இந்த அகதிக்காக குரல் கொடுக்கவில்லை.
இரண்டும் தற்கொலைதான். இரண்டும் அதிகாரிகளின் தொல்லை காரணமாகவே நடந்திருக்கிறது. ஆனால் இது குறித்த பார்வை ஒரே மாதிரியா இல்லையே. ஏன் இந்த நிலை? ஈழ அகதி ஒரு தமிழன் என்பதாலா?
தற்கொலை செய்துகொண்ட அந்த அகதி கடைசியாக இந்த உலகத்திற்கு கூறிய வசனம் " என் மரணம் அகதிகளுக்கு விடுதலை பெற்று தரட்டும்"
இந்த அகதிகளை கொடுமைப் படுத்துவது சிங்கள மகிந்த ராஜபக்ச அல்ல.
இந்த அகதிகள் விடுதலை கேட்பது சிங்கள இலங்கை அரசிடமிருந்து அல்ல
இந்த அகதிகளை கொடுமைப்படுத்துவது தமிழக அரசும் தமிழ் அதிகாரிகளுமே.
இந்த அவலம் கடந்த 35 ஆண்டுகளாக தமிழக மண்ணில் தமிழக மக்கள் முன்னிலையிலே நடக்கிறது.
ஈழத்து படைகள் அனுப்பி ஈழம் பெற்றுக் கொடுப்பேன் என்று கூறிய ஜெயா அம்மையார் ஆட்சியிலேதான் இந்த கொடுமைகள் நடக்கின்றன.
சாவதற்கள் ஈழத்தை காண்பேன் என்று டெசோ மாநாடு நடத்தும் கலைஞர் ஆட்சியிலும்தான் இந்த கொடுமைகள் நடந்திருக்கின்றன.
தங்கள் ஆட்சியில் இந்த அகதி மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்காத இவர்கள் எப்படி ஈழத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவுவார்கள் என்று நம்பமுடியும்,?
இதைவிடக் கொடுமை "இந்த அகதி விளையாட்டாக ஏறினாராம். அது விபரீதமாக முடிந்து விட்டதாம். மற்றும்படி தற்கொலை செய்யும்படி கூறிய அந்த அதிகாரி நல்லவராம். நேர்மையானவராம்" என்று குமுதம் ரிப்போட்டர் எழுதியுள்ளது. அது 5 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன.
இப்படி ரோகிதவின் மரணத்தை எழுத முடியுமா?
ஓரு சாதி தலைவரின் மரணத்தை எழுதமுடியுமா?
ஓரு சாதி தலைவரின் மரணத்தை எழுதமுடியுமா?
இந் நேரம் நூறு குமுதம் இதழ் கொழுத்தப்பட்டிருக்காதா?
ஒரு பஸ்சாவது அடித்து நொருக்கப்பட்டிருக்காதா?
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராக தமிழில் எழுதி அதை தமிழனுக்கே லட்சக்கணக்கில் இவர்களால் விற்பனை செய்ய முடிகிறது?
இப்படி,
கர்நாடாவில் இருந்துகொண்டு கன்னடனுக்கு எதிராக எழுத முடியுமா?
கர்நாடாவில் இருந்துகொண்டு கன்னடனுக்கு எதிராக எழுத முடியுமா?
பம்பாயில் இருந்துகொண்டு மராட்டியனுக்கு எதிராக எழுதமுடியுமா?
கேரளாவில் இருந்துகொண்டு மலையாளிகளுக்கு எதிராக எழுதமுடியுமா?
துக்ளக் சோவும், இந்து ராம் களும் தமிழ்நாட்டில் இருந்து தமிழனுக்கு எதிராக எழுத முடியும். அதை தமிழன் தலையிலே கட்டவும் முடியும்.
"தேவடியா பயல்களே! அடித்து போட்டால் யார் என்று கேட்க யாருமற்ற அனாதை நாய்களே" என்றுதான் தமிழக காவல்துறையினர் அகதிகளை பார்த்து ஏசுவார்கள்.
ஆம். அது உண்மைதான்.
ஈழ தமிழ் அகதிகள் யாருமற்ற அனாதைகள்தான்.
No comments:
Post a Comment