•இவர்களை தமிழ் மக்கள் நினைவில் கொள்வார்களா?
இவர்களின் தியாகங்கள் மக்களால் மதிக்கப்படுமா?
இவர்களின் தியாகங்கள் மக்களால் மதிக்கப்படுமா?
கடும் மழையிலும் குளிரும் மத்தியில் இவர் சயிக்கிளில் ஜ.நா அலுவலகம் செல்வது யாருக்காக?
இது தமக்காக என்பதை தமிழ் மக்கள் அறிவார்களா? இவர்களது உணர்வை மக்கள் மதிப்பார்களா?
இவர்கள் விரும்பியிருந்தால் சூடேற்றிய அறையில் இருநது;கொண்டு அறிக்கை விட்டிருக்க முடியும்? அதை விடுத்து எதற்காக கடுங்குளிரில் ஜ.நா நோக்கி செல்ல வேண்டும்?
இவர்கள் விரும்பியிருந்தால் அமைச்சர் மங்களவை அழைத்து நட்சத்திர ஓட்டலில் விருந்துண்டிருக்கலாம். அதைவிடுத்து கொட்டும் மழையில் எதற்காக ஜ.நா முன்றலில் படங்களை காட்சிப்படுத்த வேண்டும்?
இவர்கள் விரும்பியிருந்தால் ஜெர்மன் சென்று ஜனாதிபதி மைத்திரியுடன் கைகுலுக்கி போட்டோ பிடித்திருக்கலாம். அதைவிடுத்து எதற்காக 3 நாட்கள் கஸ்டப்பட்டு சயிக்கிள் பிரச்சாரம் செய்ய வேண்டும்?
இவர்கள் விரும்பியிருந்தால் "மானாட மயிலாட" பார்த்துவிட்டு கொலிடேக்கு இலங்கை சென்று வந்திருக்கலாம். அதைவிடுத்து இலங்கைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று எதற்காக போராட வேண்டும்?
ஒரு நாளைக்கு குறைந்தது 60 பவுண்ட் என்று பார்த்தாலும் ஜந்து நாளில் 300 பவுண்ட்( சுமார் 60 அயிரம் ரூபாய்) சம்பாதித்திருக்க முடியும். அதைவிடுத்து அந்த பணத்தை இழந்து எதற்காக இவர்கள் போராட வேண்டும்?
இவர்கள்,
நடந்தது இனப் படுகொலை என்கிறார்கள். அது தவறா?
மற்ற இன மக்களுக்கு அதனை தெரியப்படுத்துகிறார்கள். அது தவறா?
ஜ.நா விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அது தவறா?
நடந்தது இனப் படுகொலை என்கிறார்கள். அது தவறா?
மற்ற இன மக்களுக்கு அதனை தெரியப்படுத்துகிறார்கள். அது தவறா?
ஜ.நா விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அது தவறா?
தலைவர்கள் சிங்க கொடி ஏந்தினாலும் தமிழ் மக்கள் போராட்டத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்பதை இவர்கள் காட்டுகிறார்கள். அது தவறா?
No comments:
Post a Comment