•தமிழனும் தமிழ்நாடும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுமானால்
தமிழ்நாடு தனிநாடாக பிரிவதைத் தவிர வேறு வழியில்லை!
தமிழ்நாடு தனிநாடாக பிரிவதைத் தவிர வேறு வழியில்லை!
இதுவரை 600க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால் இந்திய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
அதுமட்டுமன்றி தமிழக மக்களின் வரிப் பணத்தில் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு தொடர்ந்து பயிற்சியும் ஆயுதமும் வழங்கி வருகிறது.
வருடந்தோறும் தமிழகத்தில் இருந்து 85 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு வரட்சி நிவாரண நிதியாக வெறும் இரண்டாயிரம் கோடி ரூபாவையே தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
கடந்த 140 ஆண்டுகளில் மிகப் பெரிய வறட்சியை தமிழகம் சந்தித்துள்ளது. 90% வீதமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்னர். 300 விவசாயிகள் இதனால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகளவான வறட்சியை சந்தித்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதனாலேயே வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரண நிதியாக 62138 கோடி ரூபாவை தமிழக அரசு கோரியிருந்தது.
ஆனால் இந்திய அரசு 2014 கோடி ரூபாவை மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. அதாவது தமிழ்நாடு கோரிய நிதியில் வெறும் 3% வீதம் மட்டுமே இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
காவிரி ஆற்றில் 90 வீதமான தண்ணீரைப் பயன்படுத்திய கர்நாடக மாநிலம் வறட்சி நிவாரண நிதியாக 4702 கோடி ரூபாவை கோரிய நிலையில் 1782 கோடி ரூபாவை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதாவது கர்நாடக மாநில அரசு கோரிய நிதியில் 39% வீதம் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
ஆந்திர அரசு வறட்சி நிவாரண நிதியாக 1500 கோடி ரூபா கோரிய நிலையில் 518 கோடி ரூபா அதாவது 33% வீதம் இந்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்திற்கு 39% வீதமும் ஆந்திராவுக்கு 33% வீதமும் ஒதுக்கிய இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு வெறும் 3% வீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இது தமிழ்நாடு தொடர்ந்து இந்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது குறித்து தமிழக அரசுக்கு அக்கறை இல்லை. அதன் அக்கறை எல்லாம் தேர்தலில் இரட்டை இலை சின்னம் பெறுவது குறித்தே இருக்கிறது.
தமிழக ஆளும் கட்சியின் சார்பில் 50 எம்.பி மார்கள் டில்லியில் இருக்கின்றனர். அவர்கள்கூட தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் இத் துரோகங்கள் குறித்து பேசுவதில்லை.
பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில் நடிகைமார்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால் தமிழக எம்.பி மார்களை சந்திக்க நேரம் ஒதுக்குவதில்லை.
அந்தளவுக்கு மோடியின் இந்திய அரசு தமிழனையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து வஞ்சிக்கின்றது.
காங்கிரஸ் அரசானாலும் , பாஜக அரசானாலும் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு தனிநாடாக பிரிவதைத் தவிர வேறு வழியில்லை.
No comments:
Post a Comment