•லண்டனில் நடைபெற்ற தோழர் விசுவானந்ததேவன் பற்றிய நூல் அறிமுக விழா!
கடந்த 11.03.17யன்று மாலை 5 மணிக்கு லண்டன் ஈஸ்ட்காம் நகரில் தோழர் விசுவானந்ததேவன் பற்றிய நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
மறைந்த தோழர் விசுவானந்ததேவனுடன் தோழர்கள் ரமணி, சந்ததியார், கண்ணன்,ஞானம், அன்ரண் ஆகியோரும் நினைவு கூரப்பட்டனர்.
தோழர் விசுவானந்ததேவன் பற்றிய நூல் முதலில் கனடாவில் அறிமுகம் செய்யப்ட்டது. பின்னர் இலங்கையில் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அதையடுத்து லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது.
தோழர் சபேசன் தலைமையில் ஞபகப்பகிர்வு, நூல் அறிமுகம், கலந்துரையாடல் என்னும் தலைப்புகளில் நிகழ்வு நடைபெற்றது.
முதலில் ஹோலண்டில் இருந்து வந்திருந்த பாலசூரியன் அவர்கள் நூல் தயாரிப்பு பற்றியும் விசுவானந்ததேவன் பற்றியும் உரையாற்றினார்.
அதையடுத்து கோகுலரூபன் அவர்கள் தோழர் விசுவானந்ததேவன் பற்றிய நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
அதையடுத்து முத்து (சிறீ) அவர்கள் இந்தியாவில் இருந்து கௌரிகாந்தன் அவர்கள் எழுதியனுப்பிய உரையை வாசித்தார்.
அடுத்து நிர்மலா, நித்தியானந்தன், சார்ல்ஸ், மாசில்பாலன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இறுதியாக நோர்வேயில் இருந்து வந்திருந்த பேராசிரியர் சண்முகரத்தினம் (சமுத்திரன்) அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பார்வையாளர்களின் கலந்துரையாடலுடன் நிகழ்வு முடிவுபெற்றது.
No comments:
Post a Comment