தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல
தோழர் தமிழரசனையும் நினைவு கூர்வோம்.
தோழர் தமிழரசனையும் நினைவு கூர்வோம்.
“பகத் சிங்கும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும். பகத் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சுதந்திரம் அடைந்தோம்” என்று முன்னாள் குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் குறிப்பிட்டார். (ஆதாரம்- 24.03.1994 தினமணி)
வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர்.
நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம்.
இன்று பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் வெள்ளைக்கார அரசால் தூக்கில் இட்டுக் கொல்லப்பட்டநாள் மட்டுமன்று. தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் கொள்ளைக்கார இந்திய அரசால் கொல்லப்பட்ட நாளும் ஆகும்.
தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் இன்று ஆகும்.
தியாகி பகத்சிங்கை கொன்றதன் மூலம் இந்தியா சுதந்திரம் பெறுவதை வெள்ளைக்கார அரசால் தடுக்க முடியவில்லை.
அதேபோல் தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி.
தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோர் தமிழக மக்களுக்காக மட்டும் போராடவில்லை. ஈழத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள். அதனால்தான் அவர்கள் இந்திய அரசால் கொல்லப்பட்டார்கள்.
பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோரையும் தமிழக மக்களும் ஈழத் தமிழர்களும் என்று நினைவில் போற்றுவார்கள்.
No comments:
Post a Comment