•முள்ளிக்குள மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
11 ஆண்டுகளாக வாழ்ந்த அகதி வாழ்வு போதும். எமது பூர்வீக காணிகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என முள்ளிக்குள மக்கள் அறிவித்துள்ளனர்.
முள்ளிக்குள மக்களின் கோரிக்கை நியாயமானது. கடற்படை உடனே வெளியேறி அந்த மக்களின் காணிகளை ஒப்படைக்க வேண்டும்.
முள்ளிக்குளத்தை உள்ளடக்கிய மன்னார் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இருக்கிறார்.
செல்வம் அடைக்கலநாதன் திருச்சியில் உள்ள அவரது சொந்த வீட்டில் தங்கியிருக்கிறார். அவரது பிள்ளைகள் எல்லாம் வெளி நாடுகளில் வாழ்கிறார்கள்.
எனவே முள்ளிக்குள மக்களின் 11வருட கொடிய அகதி வாழ்வு அவருக்கு எந்தளவு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை.
ஏனெனில் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதற்காக 5 கோடி ரூபா குறைநிரப்பு பிரோரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாக்கு போட்ட தொகுதி மக்கள் தமது 11 வருட அகதி வாழ்வுக்கு எதிராக போராடுகிறார்கள். ஆனால் பதவி பெற்ற செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அவர்களோ தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்.
சம்பந்தர் அய்யா ஒரு சின்ன அறையில் வாழ்வதாக சுமந்திரன் கூறுகிறார். ஆனால் சம்பந்தர் அய்யாவின் அந்த சின்ன அறையை அலங்கரிப்பதற்காக 3 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதியளித்து பதவியை பெற்ற சம்பந்தர் அய்யா தனக்கு சொகுசு பங்களாவும் சொகுசு வாகனமும் பெற்றுள்ளார்.
முள்ளிக்குள மக்கள் சொந்த வீடுகளை இழந்து 11 வருடமாக அகதியாக வாழ்கிறார்கள். ஆனால் சம்பந்தர் அய்யா சொகுசு பங்களா பெற்றது மட்டுமன்றி அதனை அலங்கரிக்க 3 கோடி ரூபாவையும் அரசிடம் கேட்டு பெற்றுள்ளார்.
தமக்கு சொகுசு வாகனம், சொகுசு பங்களா கேட்டு வாங்கிய இந்த தலைவர்களால் தமக்கு வோட்டுபோட்ட மக்களின் சொந்த காணிகளை ஏன் அரசிடம் கேட்டு வாங்க முடியவில்லை?
என்ன கொடுமை இது?
No comments:
Post a Comment