•காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு
எப்போது தீர்வு கிடைக்கும்?
எப்போது தீர்வு கிடைக்கும்?
காணாமல் போனவர்களின் உறவுகள் மேற்கொண்டு வரும் போராட்டம் 33வது நாளாக தொடர்கிறது.
ஆனால் இதுவரை நல்லாட்சி அரசும் பதில் சொல்லவில்லை. நல்லாட்சி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவரும் சம்பந்தர் அய்யாவும் கண்டு கொள்ளவில்லை.
காணமல்போனவர்கள் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் இல்லை என்று பதில் சொல்லி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த இரண்டில் ஒரு பதிலை சொல்வதற்கு ஏன் அரசு தயங்குகிறது என்று புரியவில்லை. ஏன் இழுத்தடிக்கிறது என்றும் தெரியவில்லை.
தனக்கு பதவியும் சொகுசு பங்களா வாகனம் கேட்டு வாங்கிய சம்பந்தர் அய்யாவுக்கு இந்த காணமல் போனோர் பிரச்சனைக்கு ஏன் பதிலை கேட்டுப் பெற முடியவில்லை?
இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கிய ஜ.நா நாடுகள்கூட ஏன் காணாமல் போனோர் பிரச்சனையை இதுவரை தீர்க்கவில்லை என்று இலங்கை அரசைக் கேட்கவில்லை.
தனக்கு உயிராபத்து என்று பொய் சொல்லி அதிரடிப்படை பாதுகாப்பைக் பெற்ற சுமந்திரன் கூட இந்த காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு ஒரு தீர்வை பெற்று தர விரும்பவில்லை.
ஜ.நா சென்று இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த சுமந்திரன், காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று அங்கு கேட்கத் தோன்றவில்லை.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக வவுனியா வரை சென்ற சம்பந்தர் அய்யாவால் அருகில் இருந்த காணாமல் போனவர்களின் உறவுகளை சந்திக்க அக்கறை கொள்ளவில்லை.
இரண்டு வருட கால அவகாசத்திற்கு ஆதரவு வழங்குவதாயின் காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையாவது சம்பந்தர் அய்யா பொட்டிருந்தால் இந் நெரம் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும்.
ஆனால் சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் தொடர்ந்து நிபந்தனை அற்ற ஆதரவை அரசுக்கு வழங்கி வருகின்றனர். இதனாலேயே அரசும் தமிழர் பிரச்சனையில் அக்கறையற்று இருக்கின்றது.
தமிழ் தலைவர்களே காணாமல் போன தமிழர்களின் விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை எனில் சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி அக்கறை காட்டுவார்கள்?
பாவம் தமிழ் மக்கள்!
No comments:
Post a Comment