•இது சிரிப்பதற்கு அல்ல. சிந்திப்பதற்கு!
இடம்- யாழ் தமிழரசுக்கட்சி காரியாலயம்
நிருபர்- நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் 120 கோடி ரூபா பெறுமதியான சொகுசு பங்களாவை சம்பந்தர் அய்யா பெற்றுக் கொண்டது சரியா?
சுமந்திரன் - அவர் தமிழ் மக்களுக்கு அளப்பரிய தியாகம் செய்திருக்கிறார். அதனால் அரசு அவருக்கு பங்களாவை வழங்கியுள்ளது.
நிருபர்- அப்படி என்ன தியாகத்தை அவர் செய்துவிட்டார்?
சுமந்திரன்- தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரக போராட்டம் செய்தபோது சம்பந்தர் அய்யாவை கைது செய்த பொலிஸ் பனாகொடை ராணுவ முகாமில் வைத்து சித்திரவதை செய்தது.
நிருபர் - என்னது சித்திரவதையா? இல்லையே. தனக்கும் சத்தியாகிரக போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலையானவர் அல்லவா சம்பந்தர் அய்யா. நீங்கள் ஏன் தவறாக கூறுகிறீர்கள்?
உடனே சுமந்திரன் ஒரு கவரை நிருபரிடம் கொடுத்தார். கவரைப் பிரித்து பார்த்த நிருபர் அதனுள் பணம் இருப்பதைக் கண்டு முகம் மலர்ந்து “ அப்புறம் என்ன நடந்தது சொல்லுங்கள்” என்றார்.
சுமந்திரன் - அப்போது ஒரு சிங்கள ராணுவ வீரன் சம்பந்தர் அய்யாவின் வயிற்றில் துப்பாக்கி முனையால் குத்திவிட்டான். இன்றும் அந்த தழும்பு அவர் வயிற்றில் உள்ளது.
நிருபர்- என்னது தழும்பா?
சுமந்திரன்- ஆம். சாதாரண மக்கள் அதை “தொப்புள்” என்பார்கள். ஆனால் அது வீரத் தழும்பு என்பது எனக்கு மட்டுமே தெரியும். நேற்றுதான் இதை கனடா தமிழரசுக்கட்சி தலைவர் தங்கவேல் அய்யாவுக்கு கூறினேன். அவர் உடனே “வாழும் தழும்பு வீரர்” என்னும் பட்டத்தை அடுத்த மாதம் சம்பந்தர் அய்யாவுக்கு கொடுக்கப் போவதாக கூறினார்.
இதைக் கேட்டதும் நிருபருக்கு தலை சுற்றியது. இன்றைக்கு இந்த பேட்டி போதும் சேர் என்று கூறிவிட்டு பத்திரிகை அலுவலகம் நோக்கி புறப்பட்டார்.
குறிப்பு- யாவும் கற்பனை அல்ல.
No comments:
Post a Comment