வத்திக்கானில் இருந்து கிருத்தவ பாப்பரசர் வரலாம்
அரபு நாடுகளில் இருந்து இஸ்லாமிய மதகுரு வரலாம்
பர்மாவில் இருந்து பௌத்தமத துறவிகள் வரலாம்
இந்தியாவில் இருந்து இந்துமத அர்ஜீன் சம்பத் வரக்கூடாதா?
வரலாம். தாராளமாக வரலாம். ஆனால் ஏன் இப்போது வருகிறார்?
முள்ளிவாய்க்காலில் ஆயிரக் கணக்கில் இந்துக்கள் கொல்லப்பட்டபோது வராதவர்
பல இந்து ஆலயங்கள் மீதே குண்டுகள் வீசப்பட்டபோது வராதவர்
இந்து மத குருக்கள் பலர் கொல்லப்பட்டபோதோ அல்லது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோதோ வராதவர்
இப்போது எதற்காக வருகிறார்?
கண்ணியாவில் பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டு புத்த விகாரை கட்டப்படுகிறதே அதைத் தடுக்க வருகிறாரா?
அல்லது,
ரவி சர்மா என்னும் இந்துமத ஐயர் சிறையில் பல வருடங்களாக இருக்கிறாரே. அவரை விடுதலை செய்ய வருகிறாரா?
அல்லது,
காணாமல் போன தமிழ் இந்துக்களைக் கண்டு பிடிக்க வருகிறாரா?
அல்லது,
இடம் பெயர்ந்து இருக்கும் இந்துக்களை மீள் குடியேற்றம் செய்ய வருகிறாரா?
இல்லை. இல்லை. இவை எதுவுமே இல்லை.
சங்கிலி மன்னனின் 400வது ஆண்டை நினைவு கூர அவர் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார்.
ஏன் திடீரென்று இவரும் இவரது ஏஜென்டான சச்சிதானந்தனும் சங்கிலி மன்னனுக்கு விழா எடுக்கிறார்கள்.
சங்கிலி மன்னன் தமிழ் மன்னன். யாழ்ப்பாண தமிழ் ராஜ்ஜியத்தின் கடைசி மன்னன் அவன்.
அவனுக்கு விழா எடுப்பவர்கள் தமிழர் தம்மை தாமே மீண்டும் ஆள்வதற்கு உரிய தமிழீழத்தை ஆதரிப்பார்களா?
இவர்களும் ஆதரிக்க மாட்டார்கள். இவர்களை அனுப்பி வைத்த இந்திய அரசும் ஆதரிக்காது. இலங்கை அரசும் அனுமதிக்காது.
அப்படியென்றால் எதற்காக சங்கிலியனுக்கு விழா எடுக்கிறார்கள்?
சங்கிலியன் கிருத்தவ மதத்திற்கு மாறிய 650 தமிழர்களை மன்னாரில் கொன்று புதைத்தவனாம். அதற்காகவே விழா எடுக்கிறார்கள்.
சங்கிலியன் போல் இப்பவும் மதம் மாறுபவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே இவர்களது விருப்பம். அதாவது மதத்தின் பேரால் தமிழ் மக்கள் மத்தியில் ரத்த ஆறு ஓட வேண்டும் என்பதே இவர்களது விருப்பம் அகும்.
குறிப்பு- அர்ஜீன் சம்பத் மனைவி மதம் மாறிவிட்டார் என்று கூறுகிறார்கள். தன் மனைவி மதம் மாறியதையே தடுக்க முடியாதவர் ஈழத்தில் மதம் மாறுபவர்களை தடுக்க வருகிறாராம்.
No comments:
Post a Comment