•இது என்ன நியாயம்?
பொதுபலசேனா வின் ஞானசார தேரர் ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏன் ஞானதேரர் விடுதலை செய்யப்பட்டார் என்று கேட்டால், ஜனாதிபதி உறுதி மொழி அளித்துவிட்டார். அதனால் விடுதலை செய்யப்பட்டார் என்கிறார்கள்.
சரி. அப்படியென்றால் தமிழ் சிறுமிக்கு வருடப்பிறப்பிற்கு முன்னர் தந்தை விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி உறுதியளித்திருந்தாரே ஏன் அந்த தந்தை விடுதலை செய்யப்படவில்லை?
அதற்கு “அந்த தந்தை ஒரு புலி. ஆனால் ஞானதேரர் ஒரு சமய துறவி” என்கிறார்கள்.
சரி அப்படியென்றால் ரவிசர்மா என்ற இந்துமத குருவை ஏன் விடுதலை செய்யவில்லை?
அதற்கு “ ஞானதேரரை விடுதலை செய்யுமாறு ஹிஸ்புல்லா அசாத்அலி போன்ற முஸ்லிம் தலைவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் ரவி சர்மாவை விடுதலை செய்யும்படி தமிழ் தலைவர்கள் கூட கேட்கவில்லையே என்கிறார்கள்.
உண்மைதான். ஆனால்,
(1)ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்படுவதற்கு ஹிஸ்புல்லாவோ அல்லது அசாத் அலியோ காரணம் இல்லை. எனவே இவர்கள் விடுதலை செய்யச் சொன்னால் அதற்காக விடுதலை செய்ய வேண்டியதில்லை.
(2)அதுமட்டுமல்ல இன்று இவர்கள் தங்கள் மீது விசாரணை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஞானசார தேரரை விடுதலை செய்யும்படி கேட்கின்றனர்.
(3) நீதிமன்றத்தை அவமதித்ததாலே ஞானசாரதேரர் 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே அவருக்கு மன்னிப்பு வழங்குவதாக இருந்தால் நீதிமன்றமே வழங்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்,
•தமிழர்களின் வாக்கு மூலமே மைத்திரி ஜனாதிபதியானார். ஆனால் அவர் தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்வதில்லை.
•இன்றைய ரணில் அரசுகூட தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவின் மூலமே நீடிக்கின்றது. இந்த அரசும்கூட தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
•தமிழ் மக்கள் இவ்வாறு ஏமாற்றப்படுவதற்கு சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்குவதே காரணம்.
No comments:
Post a Comment