Friday, May 31, 2019

சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன்

சரணடையச் சொன்னார்கள்,
சரணடைந்தேன்
ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள்,
உட்கார்ந்தேன்
குடிக்க தண்ணீர் தந்தார்கள்
குடித்தேன்
சாப்பிட பிஸ்கட் தந்தார்கள்
சாப்பிட்டேன்.
ஆனால்,
கடைசியில சுட்டுக் கொல்லப் போகின்றார்கள்
என்று எனக்கு சொல்லவேயில்லையே.
நான் செய்த தவறுதான் என்ன?
தமிழனாக பிறந்ததைத் தவிர!
ஒருவேளை
நான் மகிந்த ராஜபக்சவின் மகனாக பிறந்திருந்தால்
லண்டன் ராணியின் குதிரையை தந்திருப்பார்கள் சவாரி செய்ய
நான் ஒரு தமிழன் மகன் என்பதால்தானே என்னைக் கொன்றார்கள்
அவர்கள் என்னைக் கொன்றபோதுகூட வலிக்கவில்லை
ஆனால் எம்மவர்களே
நடந்தது இனப் படுகொலை அல்ல
வெறும் போர்க்குற்றம்தான் என்று சொல்வதுதான்
எனக்கு வலிக்கிறது.
பிளீஸ்,
நீங்கள் எனக்காக நியாயம் கேட்காவிட்டாலும் பரவாயில்லை
நடந்தது இனப் படுகொலை அல்ல என்று மட்டும் கூறாதீர்கள்.

No comments:

Post a Comment