எவன்டா தூங்கிட்டு இருந்த சிங்கத்தை சீண்டியது?
இன்னைக்கு எத்தனை தலை உருளப் போகுதோ தெரியவில்லையே?
சரி, சரி வந்தனீங்க இந்த கதையையும் கொஞ்சம் படிச்சிட்டு போங்கோ.
இடம்- யாழ் மருத்துவ மனை. அறை- மன நல சிகிச்சை வழங்கும் அறை.
டாக்டர் - ஹலோ , நான் மனநல டாக்டர் பேசுகிறேன். உங்களுக்கு என்ன பிரச்சனை?
குரல் - டாக்டர் கொஞ்ச நாளாய் எனக்கு தூக்கம் வருகுதில்லை.
டாக்டர் - அப்படியா? இப்ப வெயில் காலம்தானே? ஒரு பேன் (fan ) போட்டு பாருங்களேன்.
குரல்- டாக்டர் நான் எப்பவும் ஏசி ரூமில்தான் இருக்கிறன். அப்படியிருந்தும் தூக்கம் வருகுதில்லை.
டாக்டர்- ஓ! அப்படியா? நீங்கள் ஏதோ பிரச்சனை பற்றி கவலைப்படுறியள் போல இருக்கு. இப்ப எங்கட சம்பந்தர் அய்யாவைப் பாருங்க. தமிழ் மக்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தும் அவர் எந்தக் கவலையும் இன்றி எப்போதும் தூக்கத்தில் இருக்கிறார் அல்லவா? அவரைப் போல நீங்களும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் நன்றாய் தூங்குங்கள்.
குரல் - யோவ் டாக்டர்! அந்த சம்பந்தர் அய்யாதான் பேசுறன். எனக்குத்தான் இப்ப தூக்கம் வருகுதில்லை.
டாக்டர் - என்னது? உங்களுக்கே தூக்கம் வருகுதில்லையா? இது மெடிக்கல் மிரக்கிள் அய்யா.
குரல் - எல்லாம் இந்த சுமந்திரன் பார்த்த வேலையால வந்தது. இலங்கை அரசைக் காப்பாற்ற மன்னாரில் கிடைத்த எலும்புக்கூடுகள் 300 வருடத்திற்கு முந்தியது என்றார். இப்ப என்னடா என்றால் அது சங்கிலியன் மதம் மாறிய 650 கிருத்தவர்களை கொன்றது என்றுகூறி சங்கிலியனுக்கு விழா எடுக்கிறாங்கள். எப்படி இதைச் சமாளிக்கிறது என்று தெரியவில்லை.
டாக்டர் - ஓ மை காட். பிளீஸ் என்னை விட்டிடுடுங்க ஐயா. எனக்கு தூக்கம் வராம போய்விடும் போல இருக்கு.
No comments:
Post a Comment