•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
உலகெங்கும் உள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
உலகெங்கும் உள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்தார்கள்
வேம்படி பாடசாலையில் குண்டு என்றார்கள்
நல்லூர் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு என்றார்கள்
9 தற்கொலைதாரிகள் வேனுடன் யாழில் புகுந்து விட்டனர் என்றார்கள்
ஆனால் அத்தனையையும் தாண்டி தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கூடினார்கள்.

முள்ளிவாய்க்காலில் சிறுமி ராகினி நினைவுச் சுடரை ஏற்றினாள்.
எந்த முள்ளிவாய்க்காலில் தன் ஒரு கையை இழந்தாளோ
எந்த முள்ளிவாய்க்காலில் தன் பெற்ற தாயை இழந்தாளோ
எந்த முள்ளிவாய்க்காலில் தன் தாய் இறந்ததுகூட தெரியாமல் தாயிடம் பால் அருந்தினாளோ
அந்த முள்ளிவாய்க்காலில் தன் ஒற்றைக் கையால் சுடரை ஏற்றியுள்ளாள்.
அவள் எதை இழந்தபோதும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.
அதனால்தான் பத்து வருடம் கழித்து வந்து இலங்கை அரசின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறாள்.
“நீங்கள் எங்களை சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” என்பதை உரத்து கூறியிருக்கிறாள்.

ஆம். தமிழ் மக்கள் உரிமைகளை இழந்தார்கள்
உயிர்களையும் உடமைகளையும்கூட இழந்தார்கள்
ஆனால் அவர்கள் ஒருபோதும் உணர்வை இழக்கவில்லை.
அதனால்தான் இத்தனை இழப்பிற்கு பின்பும் அவர்களால் மீண்டும் எழ முடிகிறது.

தமிழர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அங்கங்கு எல்லாம் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவு கூர்ந்துள்ளார்கள்.
ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி தமிழக தமிழர்கள், மலேசிய தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள் எல்லாம் இதனை தமது இழப்பாக கருதி நினைவு கூருகின்றனர்.
இந்த வருட நினைவு கூரல் உலக தமிழர்கள் ஒன்றாகிறார்கள் என்ற செய்தி இலங்கை அரசிற்கு மட்டுமன்றி உலகிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment