Sunday, March 29, 2020
ஏழு தமிழர் விடுதலை.
•ஏழு தமிழர் விடுதலை.
மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்!
மக்கள் எல்லோரும் கொரோனா பிரச்சனையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் தமிழக அரசும் தமிழக ஆளுநரும் சேர்ந்து எழுவர் விடுதலையில் தமிழ்மக்களை ஏமாற்றியுள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழக அரசு எழுவர் விடுதலைக்கு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
இரண்டு வருடங்களாக தனது கருத்தை தெரிவிக்காத ஆளுநர் தற்போது பதில் அனுப்பியிருப்பதாக தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ராசீவ் கொலையின் பின்னணியில் உள்ள பன்னாட்டுச் சதியை விசாரிக்க அமைக்கப்பட்ட MDMA விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் தீர்மானம் குறித்து முடிவெடுப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளாராம்.
20 ஆண்டுகளைக் கடந்தும் MDMA தனது விசாரணையை முடிக்கவில்லை. இந்த அமைப்புதான் பெல்ட்பாம் எங்கே தயாரிக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரிக்கிறது.
இந்த பெல்ட் பாமிற்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் தான் தண்டனைக்கான மூலச் சான்று.
சட்டமன்றத் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டியது தான் ஆளுநருடைய கடமையே தவிர அவர் ஒன்றும் நீதிமன்றம் கிடையாது.
விசாரணை முடிக்காத அமைப்பைக் காரணம் காட்டுவது எழுவர் விடுதலையைத் தொடர்ந்து காலந் தாழ்த்தும் செயல்திட்டமே அன்றி வேறல்ல.
MDMA விசாரணை அறிக்கை வேண்டும் எனக் கோரும் ஆளுநர் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை தான் தவறாக எழுதியதாகக் கூறும் விசாரணை அதிகாரி தியாகராசனின் பிராமணப் பத்திரத்தை ஏன் ஏற்பதில்லை?
சட்டத்தை மீறிய சதுரங்க ஆட்டத்தை எழுவர் விடுதலையில் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக அரசும் தமிழக ஆளுநரும் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர்.
முடிவுறாத விசாரணைக்கு முப்பது ஆண்டுகள் தண்டனையா?
Image may contain: 7 people, including சுசிந்திரன் பன்னீர், text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment