Sunday, March 29, 2020
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
•எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
பின் நல்வராவதும் கெட்டவராவதும் சமூகத்தின் வளர்ப்பினிலேதான்!
நேற்றுதான் நிர்பாயா குற்றவாளிகள் நாலுபேரை தூக்கில் போட்டார்கள்.
கடுமையான மரண தண்டனை வழங்குவதன் மூலமே பாலியல் வல்லுறவை ஒழிக்க முடியும் என்றார்கள்.
இதோ இன்று காலை சென்னையில் ஒரு பத்து வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள்.
இனி என்ன செய்யப் போகிறார்கள்? எத்தனை பேரை தூக்கில் போட்டாலும் பாலியல் வல்லுறவை ஒழிக்க முடியாது என்பதை எப்போது உணரப் போகிறார்கள்?
மரண தண்டனை தீர்வு அல்ல என்று நாம் கூறினால் உடனே பாலியல் வல்லுறவு செய்பவர்களை நாம் ஆதரிப்பதாக முத்திரை குத்துகிறார்கள்.
குற்றத்திற்கான காரணி சமூகத்தில் அப்படியே தான் இருக்கிறது. காரணிகளை களையாமல் குற்றங்களை குறைக்க முடியாது என்பதை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?
Image may contain: 1 person
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment