Sunday, March 29, 2020
தமிழரசுக்கட்சி வேட்பாளராவதற்கு
•தமிழரசுக்கட்சி வேட்பாளராவதற்கு
“சுமந்திரனுக்கு வேண்டப்பட்டவர்” என்ற தகுதி மட்டும் போதுமா?
நிருபர் - மேடம்! வாழ்த்துக்கள் . தமிழரசுக்கட்சி வேட்பாளரானதற்கு
அம்பிகா மேடம்- ஆம். நன்றி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
நிருபர் - மேடம்! நீங்கள் வெற்றி பெற்றால் கரவெட்டிக்கு என்ன செய்வீர்கள்?
அம்பிகா மேடம் - கரவெட்டியா? அது எங்கே இருக்கிறது?
நிருபர்- என்ன மேடம், யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறீர்கள். கரவெட்டி தெரியாது என்கிறீர்கள். அதிகளவு போராளிகளை போராட்டத்திற்கு வழங்கிய ஊர் அல்லவா அது. சரி பரவாயில்லை மில்லரை அறிந்திருப்பீர்கள் அல்லவா?
அம்பிகா மேடம் - மில்லரா? அது யார்? எனக்கு சுமந்திரன் சேரை மட்டும்தான் தெரியும்.
நிருபர் - 2009ல் இனப்படுகொலை நடக்கும்போது மௌனமாக இருந்தீர்கள். அதன்பின்பும் இதுவரை மௌனமாகவே இருந்தீர்கள். இப்போது ஏன் திடீர் என்று ராஜினாமா செய்தீர்கள்?
அம்பிகா மேடம்- இப்போதுதானே சுமந்திரன் சேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து தேர்தலில் போட்டியிடும்படி என்னிடம் கேட்டிருக்கிறார்.
நிருபர் - சரி. பரவாயில்லை. தேர்தலில் வென்றால் யாழ் மாவட்டத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்வீர்களா?
அம்பிகா மேடம் - ஏன் யாழ்ப்;பாணத்தில் இருக்க வேண்டும்? சுமந்திரன் குடத்தனையில் இருந்தா சேவை செய்கிறார்? சம்பந்தர் திருகோணமலையில் இருந்தா சேவை செய்கிறார்?
நிருபர் - ஓ! அப்படியா? சரி பரவாயில்லை மேடம். இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? ஏன் உங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்?
அம்பிகா மேடம்- நான் சுமந்திரன் சேருக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவள். இந்த ஒரு தகுதி போதாதா எனக்கு வாய்ப்பு தருவதற்கு. .
குறிப்பு - தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் காலத்தில் தமிழரசுக்கட்சியில் வாய்ப்பு வழங்கும்போது குறிப்பிட்ட நபர் தமிழ் மக்களுக்கு என்ன சேவை செய்துள்ளார் என்று பார்ப்பதுண்டு. ஆனால் இம்முறை வேட்பாளராவதற்கு சுமந்திரனுக்கு வேண்டியவர் என்ற தகுதி மட்டுமே பார்க்கப்படுகிறது.
Image may contain: 1 person
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment