Sunday, March 29, 2020
தப்பு என்பது தெரிந்தே செய்வது
தப்பு என்பது தெரிந்தே செய்வது
தவறு என்பது தெரியாமல் செய்வது
எனவேதான,;
தப்பு தண்டிக்கப்படல் வேண்டும்
தவறு மன்னிக்கப்படல் வேண்டும்
தண்டனை என்பது தப்பு செய்தவர் திருந்துவதற்கேயொழிய
இன்னொருவர் தப்பு செய்யக்கூடாது என்பதற்காக ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது
மரண தண்டனை என்பது இன்னொருவர் தப்பு செய்யக்கூடாது என்பதற்காக தப்புசெய்த ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.
அது மட்டுமல்ல, மரண தண்டனை மூலம் தப்பு குறைக்கலாமேயொழிய ஒருபோதும் தவறுகளை இல்லாமல் செய்ய முடியாது
ஏனெனில் அதிக தண்டனை வழங்கும் நாடுகளில் நிகழும் குற்றங்களைவிட குறைந்த தண்டனை வழங்கும் நாடுகளில் நிகழும் குற்றங்கள் குறைவு.
எனவே உணர்ச்சிகரமாக சிந்திக்காமல் உணர்வுபூர்வமாக சிந்தித்து தண்டனைகளை வழங்க வேண்டும்.
முக்கியமாக ஒருவனை வாழ வைக்க முடியாத சமூகத்திற்கு அவனை தண்டிப்பதற்கான உரிமை இல்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
குறிப்பு - இன்று காலை நிர்பாயா குற்றவாளிகள் தூக்கில் இடப்பட்டுள்ளனர். அவர்கள் தம் குடும்பத்தினரை சந்திக்க கேட்ட இறுதி விரும்பம்கூட நிறைவேற்றாமல் தண்டிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தின் பேரால் நால்வர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Image may contain: 4 people
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment