Sunday, March 29, 2020
ஓநாயின் சாயம் வெளுக்க ஆரம்பித்துவிட்டது
•ஓநாயின் சாயம் வெளுக்க ஆரம்பித்துவிட்டது
அது தன் குணத்தை காட்ட தொடங்கிவிட்டது!
எல்லோருடைய கவனமும் கொரோனாவின் பக்கம் இருக்கும்போது ஜனாதிபதி கோத்தா அவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார்.
பதவிக்கு வரும்வரை வேஷம் போட்டவர் இப்போது தன் உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்.
இங்கு வேதனை என்னவெனில் இவருடைய சிங்கள இனவெறி நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டிய தமிழ் தலைவர்கள் பலரும் மௌனமாக இருக்கின்றனர்.
சிங்கள ராணவ வீரரை விடுதலை செய்ததைக் கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை , ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையாவது இத் தலைவர்கள் கேட்டிருக்கலாம்.
எமது தமிழ் தலைவர்களுக்கு தாம் பதவி பெறுவதில்தான் அக்கறையே யொழிய அரசியல் கைதிகள் விடுதலையில் அக்கறை இல்லை என்பது ஜனாதிபதி கோத்தாவுக்கு நன்கு தெரியும்.
அதனால்தான் அவர் இவ்வளவு தைரியமாக நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு இனப்படுகொலையாளியை விடுதலை செய்துள்ளார்.
அவர் சிங்களவர். தன் இனத்திற்கு விசுவாசமாக செயற்படுகின்றார். ஆனால் எமது தமிழ் தலைவர்களுக்கு தமிழ் இன உணர்வு கொஞ்சம்கூட இல்லையே.
தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும்படி இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி கோத்தாவுக்கு அழுத்தம் கொடுத்தார் என எழுதிய ஆரசியல் ஆய்வாளனர்கள் இனி என்ன எழுதப் போகிறார்கள்?
இந்திய அரசின் ஆதரவுடனேயே ஜனாதிபதி கோத்தா தமிழர்களுக்கு எதிராக செயற்படுகின்றார் என்ற உண்மையை தமிழ் மக்கள் உணராதவரை தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லை.
குறிப்பு - கொரோணாவுக்காக சம்பந்தர் ஐயா மாஸ்க் போட்டிருப்பதால் அவரால் கண்டிக்க முடியவில்லை போலும். ஆனால் அம்பிகா அன்ரியை எப்படியாவது எம்.பி யாக்குவேன் என சபதம் எடுத்திருக்கும் சுமந்திரன் ஏன் மெனளமாக இருக்கிறார்?
Image may contain: 1 person, standing and suit, possible text that says '2020 President GOTLER'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment