Sunday, March 29, 2020
•நெற்குன்றம் விக்ரம் அவர்களை நினைவு கூர்வோம்!
•நெற்குன்றம் விக்ரம் அவர்களை நினைவு கூர்வோம்!
எங்கள் இதயம் பூக்களைப் போல் மென்மையானது
ஆம். அது மிகவும் மென்மையானது.
எங்களை நீங்கள் வஞ்சித்தபோது வன்மையானது
ஆம். அது இன்னும் வன்மையானது.
எங்கள் தலைவிதியை மாற்றி எழுதிட
நாம் மீண்டும் எழுந்து நிற்போம்
இதற்கு முன் இழந்ததை எல்லாம்
இனி ஒன்றாய் பெற்றிடுவோம்
நாங்கள் நிச்சயம் வெல்வோம்
ஆம். இனி நாங்கள் வெல்வோம்!
இன்று (21.03.2020) நெற்குன்றம் விக்ரம் அவர்களின் 11வது நினைவு நாள் ஆகும்.
ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக யுத்த நிறுத்தம்கோரி தமிழ்நாட்டில் நெற்குன்றம் விக்ரம் தீக்குளித்து மரணித்த நாள் இன்று ஆகும்.
அவர் தேர்ந்தெடுத்த பாதை தவறானது. அதனால் அது பயன் தரவில்லை. அவர் நோக்கம் நிறைவேறவில்லை.
ஆனாலும் அவரது தியாக உணர்வு அளப்பரியது. மதிக்கப்பட வேண்டியது.
இந்திய அரசு ஒருபோதும் அகிம்சைப் போராட்டங்களை மதிக்காது என்பது மட்டுமன்றி தமிழர்களுக்கு உதவாது என்பதற்கும் இவரது மரணம் ஒரு உதாரணமாக வரலாற்றில் இடம் பெறும்.
Image may contain: 1 person, text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment