Saturday, February 26, 2022
மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம்
•மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் கொலைக்கு எப்போது நீதி கிடைக்கும்?
இவர் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஆயுதம் ஏந்தி போராடவில்லை.
இவர் தமிழ் மக்களால் வாக்கு அளித்து தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்.
ஆனாலும் இவர் சிங்கள அரசால் போர் நிறுத்த காலகட்டத்தில் 07.02.2005 யன்று கொல்லப்பட்டார்.
17 வருடங்கள் கழிந்துவிட்டன. இன்னும் இவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை.
இவர் மட்டுமல்ல ஜோசப்பரராயசிங்கம், ரவிராஜ் போன்ற தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு சிங்கள அரசால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுக்கே சிங்கள அரசு இதுவரை நீதி வழங்கவில்லை.
தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கே நீதி பெறாத சுமந்திரன் சாதாரண தமிழ் மக்களின் கொலைக்கு நீதி பெற்று தருவார் என எப்படி நம்புவது?
கடந்த ஆட்சியில் தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு என்றெல்லாம் கேட்டு வாங்கிய சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கு நீதியை பெறவில்லை.
தமக்கு வாக்களித்தால் தீர்வு பெற்று தருவோம் என்றவர்கள் இப்போது வந்து பயங்கரவாத சட்டத்தை நீக்க கையெழுத்து போடுமாறு மக்களிடம் கேட்கின்றனர்.
கடந்த ஆட்சியில் இந்த மக்கள் கையெழுத்து இல்லாதபடியால்தான் அச் சட்டத்தை உங்களால் நீக்க முடியாமற் போனதா சுமந்திரன் அவர்களே?
என்னே கொடுமை இது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment