Saturday, February 26, 2022
அமிர்தலிங்கத்தின் மகன்
அமிர்தலிங்கத்தின் மகன் பகிரதன் டிவி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பல தவறான கருத்துகளை மக்களிடத்தில் பரப்ப முனைகிறார்.
இந்திராகாந்தி போராளிகளுக்கு பயிற்றி மற்றும் ஆயுதம் வழங்க தீர்மானித்தபோது டில்லி சென்று அதை செய்ய வேண்டாம் எனக் கூறியவர் அமிர்தலிங்கம்.
ஆனால் அதே அமிர்தலிங்கம் தன் மகன் பகிரதன் ஆயுதபோராட்ட இயக்கம் ஆரம்பித்தபோது அதனை தடுக்கவில்லை.
மதுரையில் மருத்துவக்; கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பகிரதன் TENA என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
அவர் தன் படிப்பை கைவிடவில்லை. ஆனால் இளைஞர்களை படிப்பை விட்டிட்டு போராட வரும்படி அழைத்தார்.
தனது இயக்கத்திற்கு ஆள் எடுத்து அனுப்புமாறு மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் அனுப்பினார்.
மாவை சேனாதிராசா தானும் போகவில்லை. தன் பிள்ளைகளையும் அனுப்பவில்லை. மாறாக ஊரான் வீட்டு பிள்ளைகளை பிடித்து அனுப்பினார்.
இதேவேளை பகிரதனின் கடிதம் கொண்டு சென்ற ஒருவர் மன்னார் தள்ளாடி ராணுவ முகாம் செக்கிங்கில் பிடிபட்டார்.
இந்த இளைஞர் கைது மற்றும் கடித விபரம் யாவும் டிவி மற்றும் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் அதிசயம் என்னவெனில் அந்த இளைஞன் விடுதலை செய்யப்பட்டு மலேசியாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டான்.
அந்த இளைஞன் அமிர்தலிங்கத்தின் உறவினர் என்பதால் அமிர்தலிங்கம் போனில் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுடன் பேசி விடுதலை செய்வித்ததாக அப்போது தெரியவந்தது.
அமிர்தலிங்கம் தனது உறவினரை விடுவித்தபோது பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்காக அவர் ஒருபோதும் பேசவில்லை.
பயிற்சிக்காக இந்தியா அழைத்து வரப்பட்ட இளைஞர்களை பகிரதன் கவனிப்பதில்லை. தமக்கு உணவு கூட ஒழுங்காக தரப்படவில்லை என்று கூறி அத்தனை இளைஞர்களும் மதுரையில் புலிகள் இயக்கத்தில் சென்று சேர்ந்துவிட்டார்கள்.
இவ்வாறு பகிரதனின் TENA இயக்கம் முடிவுக்கு வந்தது. இதுதான் அவரின் ஆயுதப் போராட்ட வரலாறு.
இதையே அவர் தானும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவன் என பேட்டியில் குறிப்பிடுகிறார்.
தனது படிப்பை கைவிடாமல் படித்துக்கொண்டே இயக்கம் நடத்திய தலைவர் என்ற பெருமை பகிரதனுக்கு மட்டுமே உண்டு.
அமிர்தலிங்கம் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று பகிரதன் தன் பேட்டியில் கூறியிருக்கிறார். இது குறித்த சில விபரங்கள் அடுத்த பதிவில் தருகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment