Sunday, January 31, 2016

•தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம்!

•தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம்!
தோழர்.சண்முகதாசன் அவர்கள் இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிக் குறிப்பிடுகையில்,
"இலங்கை அரசாங்கமும் சிங்களப் பேரினவாத சக்திகளும் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடராக ஒரு நிலப்பரப்பில் மிக நீண்ட காலமாக வாழ்ந்துவரும் ஒரு தேசம் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு சுயநிர்ணயத்துக்கான உரிமை உண்டு என்பதையும் ஏற்க மறுக்கின்றமையே இனநெருக்கடிக்குத் தீர்வு காணமுடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும்.
இந்த உரிமை ஏற்கப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்டாலொழிய, இன்றைய தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு எதுவுமே இருக்கமுடியாது.
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்களசக்திகள் , ஒரு தனிநாட்டை அமைப்பதற்காக அச் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதை தமிழ்பேசும் மக்களின் மொழிவழிப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஒரு சமஷ்டியாகவோ அல்லது பூரண பிரதேச சுயாட்சியாகவோ பிரயோகிக்கும்படியும் கேட்டுக்கொள்வதற்கான அருகதையைக் கொண்டிருக்கமுடியும்.
சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதானது சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சாதி-மத-மொழி வேறுபாடுகளின்றி புரட்சிகர சக்திகளை ஒன்று திரட்டுவதை வேண்டி நிற்கும் ஜனநாயகப்புரட்சியின் ஒரு பகுதியாகும்" என்று கூறியுள்ளார்.
தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்தை வலியுறுத்தும் ஜே.வி.பி யும் அதனில் இருந்து பிரிந்து வந்துள்ள முன்னிலை சோசலிசக்கட்சியும் தோழர் சண்முகதாசனன் அவர்களின் கூற்றுப்படி தமிழ் மக்களின் சுயநிர்ணஉரிமையை அங்கீகரிக்க முன்வரவேண்டும்.
முன்வருவார்களா?

No comments:

Post a Comment