•"நாம் தமிழர்" சீமான் பதில் தருவாரா?
பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்தால் தமிழக அரசை கலைப்போம்- ராம சுப்பிரமணியன் பேச்சு
தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தால் மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசை உடனே கலைக்கும் என பா.ஜ.க சேர்ந்த ராம சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ராமசுப்பிரமணியன் பெரிய தலைவர் இல்லை. அவர் யார் என்றே பலருக்கு தெரியாது. ஆனால் அவர்கூட தமிழக அரசைக் கலைப்போம் என்று மிரட்டும் அளவிற்குதான் மாநில அரசின் அதிகாரம் உள்ளது.
இந்நிலையில் ஒரு தமிழன் முதலைமைச்சரானால் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என "நாம்தமிழர்" சீமான் கூறிவருகிறார்.
பன்னீர்செல்வம் தமிழர் தானே. அவர் ஆட்சியில் இருந்தபோது தமிழர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டதா என்று கேட்டால் பன்னீர் செல்வம் ஒரு அடிமை என்கின்றனர்.
சரி, நாளைக்கு சீமானே ஆட்சியில் வந்தாலும் இதே அதிகாரங்கள்தானே இருக்கும். எப்படி தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும்?
"நாம்தமிழர்" சீமான் பதில் தருவாரா?
அண்ணா, கலைஞர், எம.ஜி.ஆர் போன்றவர்களால் செய்ய முடியாததை சீமான் எப்படி செய்து முடிப்பார் என்பதை விளக்குவாரா?
தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்றும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாடு விடுதலை அடைவதே அனைத்து தமிழர்களுக்கும் விடுதலையாக அமையும் என்றும் தோழர் தமிழரசன் கூறினார்.
ஆனால் தேர்தல் மூலம் தமிழக அரசின் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என நாம் தமிழர் சீமான் கூறுகிறார்.
சீமான் முதலைமைச்சரானால்,
•வருடம்தோறும் டில்லி அரசுக்கு கட்டும் 85அயிரம்கோடி ரூபா வரியை நிறுத்த முடியுமா?
•தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவதை நிறுத்த முடியுமா?
•இலங்கைக்கு படையெடுத்து கச்சதீவை மீட்க முடியுமா?
•இந்திய அரசு இலங்கைக்கு வழங்கும் உதவிகளை நிறுத்த முடியுமா?
•தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியுமா?
•தமிழகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமையாவது மூட முடியுமா?
முடியும் என்றால் எப்படி என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா?
No comments:
Post a Comment