•தமிழர்களை இந்தியர்களாக அரசு மதிக்காத போது
தமிழர்கள் ஏன் தங்களை இந்தியர்களாக நினைக்க வேண்டும்?
தமிழர்கள் ஏன் தங்களை இந்தியர்களாக நினைக்க வேண்டும்?
அன்று வெள்ளைக்காரர்கள் தமிழகத்தை அடிமைப்படுத்தி கொள்ளையடித்தார்கள். எனவே அவர்களது கொடியை எரித்தபோது அதனை தியாகம் என்றார்கள்.
இன்று கொள்ளைக்கார இந்திய அரசு தமிழகத்தை சுரண்டி வருகிறது. அதனை எதிர்த்து கொடியை எரிக்கும்போது துரோகம் என்கிறார்கள்.
கேரளாவில் மீனவன் கொல்லப்பட்டபோது இந்திய மீனவன் கொலை என்று அறிவித்த இந்திய அரசு, தமிழகத்தில் 900 மீனவர்கள் கொல்லப்படும்போது தமிழக மீனவர் கொலை என்றுதானே அறிவிக்கின்றது.
வருடம் ஒன்றுக்கு 85 ஆயிரம் கோடி ருபா வரியாக தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசு பெறுகிறது. வெள்ளைக்காரனுக்கு வரி கொடுத்தால் அடிமைத்தனம் என்றார்கள். ஆனால் அதைவிட அதிகமாக இந்திய அரசுக்கு கொடுப்பதை சுதந்திரம் என்கிறார்கள்.
பங்காளதேசுடன் மேற்கு வங்க முதல்வர் நதிநீர் ஒப்பந்தம் செய்ய அனுமதித்த இந்திய அரசு, கச்சதீவை திரும்ப பெறுவது தொடர்பாக பேசுவதற்கே தமிழகத்திற்கு உரிமை இல்லை என்கிறது.
தமிழகத்தில் இருந்து பெறப்படும் வரியில் தமிழக மீனவனை சுட்டுக்கொல்லும் இலங்கை படைக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இலங்கை படைக்கு பயிற்சி வழங்க வேண்டாம். ஆயுதம் வழங்க வேண்டாம் என தமிழக அரசு பல தடவை கேட்டும் அதனை இந்திய அரசு பொருட்படுத்தவேயில்லை.
பல்லாயிரம் தமிழர்களை கொன்ற இலங்கை அரசுக்கு 10 அயிரம் கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வெறும் 2 அயிரம் கோடி ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசே தமிழனை இந்தியனாக கருதாதபோது தமிழன் மட்டும் எதற்காக தன்னை இந்தியனாக பார்க்க வேண்டும்?
இதனால் ஆத்திரம் கொண்ட தமிழக இளைஞர்கள் இந்திய கொடியை எரித்து தமது எதிர்ப்பை பதிவு செய்யம் போது அதன் புனிதத்தை கெடுத்துவிட்டதாக சிலர் ஒப்பாரி வைக்கிறார்கள்.
அவர்களிடம்' நான் கேட்க விரும்புவது,
ஒரு பிரதமர் தேசியக் கொடியால் முகம் துடைக்கும்போது கெடாத புனிதம்,
ஒரு நடிகை தேசிக்கொடிக்கு மேல் கால் வைத்து போஸ் கொடுத்த போது கெடாத புனிதம்,
ஒரு மாவட்ட ஆட்சி தலைவர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய போது கெடாத புனிதம்,
சில தமிழ் இளைஞர்கள் தேசியக்கொடியை எரித்தால் கெட்டுவிடுமா என்ன?
மணிப்பூர் பெண்கள் இராணுவத்தின் பாலியல் வல்லுறவில் இருந்து தங்களை காக்குமாறு நிர்வாணமாக ரோட்டில் போராடும் நாட்டில்,
இரோம் சார்மிளா என்ற பெண் 15 வருடமாக உண்ணாவிரதம் இருந்து வரும் நாட்டில் ,
தன் காட்டை அந்நியருக்கு விற்க வேண்டாம் என்று கோரிய ஆதிவாசிப் பெண்ணை மாவோயிஸட் பயங்கரவாதி என்று முத்திரை குத்தி கொல்லும் நாட்டில்,
தேசிய கொடிக்கு என்ன புனிதம் இருக்கு?
No comments:
Post a Comment