•லண்டன் தமிழர் பொங்கல் விழாவில்
மாகாராணியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தேவையா?
மாகாராணியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தேவையா?
ஜரோப்பாவின் குட்டி யாழ்ப்பாணம் என்று கவுன்சிலர் போல் சத்தியநேசன் அவர்களால் அழைக்கப்படும் லண்டன் ஈஸ்ட்காம் நகரில் வழக்கம்போல் இம்முறையும் பொங்கல்விழா நடைபெற்றது.
இம்முறை பொங்கல்விழாவில் மகாராணியாரின் 90 வயதை முன்னிட்டு அவரது மிகப்பெரிய படம் வைத்து அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
லண்டனில் முதல் முறையாக தமிழர்களே மகாராணியாருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதாகவும,; ஜரோப்பிய தமிழர்கள் எல்லாம் மகாராணியார் இன்னும் பல்லாண்டு வாழவேண்டும் என்று விரும்புவதாகவும் கவுன்சிலர் போல் சத்தியநேசன் கூறினார்.
லண்டனில் அகதி அந்தஸ்து கோரிய தமிழர்கள் பலருக்கு இன்னும் அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை.
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட பலர் சிறை போன்ற தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட பலர் பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இதையெல்லாம்விட, இலங்கை ராணுவத்தை நவீன மயப்படுத்த உதவி வழங்கப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.
இந் நிலையில் தமிழ் மக்கள் எதற்காக மகாராணியாருக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டும்?
பொங்கல் விழாவில் மகாராணியாருக்கு தமிழ்மக்கள் எதற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்?
யாருக்காவது தெரிந்தால் எனக்கு கொஞ்சம் புரிய வையுங்களேன்!
இதேவேளை லண்டன் மாநகரில் தமிழ் இளையோர் பறை அடித்து சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார்கள். அந்த இளையோர்களது பொங்கல், எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தருகிறது.
அந்த இளையோர்களுக்கு பாராட்டுகள்.
No comments:
Post a Comment