•இவரும்கூடவா அரசியல் கைதி இல்லை?
செய்தி- இலங்கை சிறையில் தமிழ், சிங்கள அரசியல் கைதிகள் யாரும் இல்லை.- சுவிசில் இலங்கை பிரதமர் ரணில் தெரிவிப்பு
சோசலிச முன்னனி தலைவர் குமார் குணரட்னம் கடந்த 70 நாட்களுக்கு மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவரை விடுதலை செய்யுமாறு இலங்கையில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.
அப்படியிருக்கும்போது இலங்கை சிறையில் அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று பிரதமர் ரணில் கூறியிருக்கிறார்.
அப்படியென்றால் குமார் குணரட்ணம் அரசியல் கைதி இல்லையா?
அப்படியென்றால்,
அவர் வெள்ளைவான் கடத்தல் குற்றவாளியா?
அவர் பல்லாயிரம் தமிழர்களை கொன்ற கிரிமினலா?
அவர் பல கோடி ஊழல் செய்த குற்றவாளியா?
அவர் போதைவஸ்து கடத்திய குற்றவாளியா?
அவர் வெள்ளைவான் கடத்தல் குற்றவாளியா?
அவர் பல்லாயிரம் தமிழர்களை கொன்ற கிரிமினலா?
அவர் பல கோடி ஊழல் செய்த குற்றவாளியா?
அவர் போதைவஸ்து கடத்திய குற்றவாளியா?
இப்படி பொய் கூறும் பிரதமரை நல்லாட்சி செய்வதாக சொல்கிறார்களே?
காணாமல் போனவர்கள் யாவரும் இறந்துவிட்டார்கள் என்று பொங்கல் விழாவில் ரணில் கூறினார்.
இப்பொது அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை என்கிறார்.
இனி அடுத்து என்ன கூறப்போகிறாரோ தெரியவில்லை?
அவர் என்ன கூறினாலும் அதை ஆதரிக்க "வாழ்நாள் வீரர்" சம்பந்தர் அய்யா அருகில் இருக்கும்போது அவர் ஏன் தயங்கப்போகிறார்?
No comments:
Post a Comment