Sunday, January 31, 2016

முதலில் "அகதி காவியம்" எழுதுங்கள் அப்புறம் "ஈழ காவியம்" எழுதலாம் கவிஞரே!

•முதலில் "அகதி காவியம்" எழுதுங்கள்
அப்புறம் "ஈழ காவியம்" எழுதலாம் கவிஞரே!
செய்தி- ஈழகாவியம் எழுதுவேன்- கவிஞர் வைரமுத்து தெரிவிப்பு
மன்னர் கருணாநிதி அரசவையில் எக் காலமும் புகழ்ந்து பாடி பரிசில்கள் பெற்றுவந்த கலைஞர் அரசவைக் கவிஞர் வைரமுத்து அவர்கள் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்து தான் "ஈழ காவியம்" படைப்பேன் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த அகதிகள் அடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழன் மட்டும் அகதியாக, அடிமையாக வாழ்கிறான்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அதுவும் ஈழ அகதி மட்டுமே சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
இந்த சிறப்புமுகாமை ஆரம்பித்து வைத்தவரே கலைஞர் கருணாநிதிதான்.
இது கவிஞர் வைரமுத்தவின் கண்களுக்கு இதுவரை தெரியவில்லையா?
கவிஞரே!
நீங்கள் உண்மையிலே ஈழத் தமிழர் மீது அனுதாப்படுகின்றீர்கள் என்றால்,
முதலில் தமிழ்நாட்டில் அகதிகள் இன்னல் குறித்து காவியம் பாடுங்கள்.
அப்புறம் முள்ளிவாய்க்கால் அவலம் குறித்து ஈழ காவியம் பாடலாம்.
செய்வீர்களா கவிஞரே?

No comments:

Post a Comment