"நாம் தமிழா"; சீமான் அவர்களின் கட்சதீவு மீட்பு!
தான் முதலமைச்சாரானால் 50 ஆயிரம் வீரர்கள் கொண்ட சிறப்புபடை அமைத்து கச்சதீவை மீட்பேன் என்று "நாம்தமிழர்" சீமான் கூறியுள்ளார்.
சீமான் அவர்களின் உரையை கீழ்வரும் இணைப்பில் கேட்கலாம்.
https://l.facebook.com/l.php…
https://l.facebook.com/l.php…
1983ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் அவர்களின் பேச்சைக் கேட்டேன். தமிழ்நாட்டு ஏழு கோடி தமிழர்களும் இராமேஸ்வரம் கரையில் வந்து ஒண்ணுக்கு இருந்தால் (மூத்திரம் பெய்தால்) முழு இலங்கையும் மூழ்கிவிடும் என்று ஜெயவர்த்தனாவை எச்சரித்து பேசினார். அப்போது எழுந்த கைதட்டலும் விசிலும் அடங்க பல நிமிடங்கள் ஆயின.
அதுபோல் இன்று சீமான் பேச்சுக்கும் கைதட்டல் வானைப் பிளக்கிறது. ஆனால் தீப்பொறி ஆறுமுகத்தின் குழந்தைதனமான நகைச்சுவை பேச்சுக்கும் சீமானின் பேச்சுக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை.
இங்கு எனது சந்தேகம் என்னவெனில்,
(1) ஒரு மாநில முதலமைச்சர் படை அமைத்து அந்நிய நாட்டுடன் சண்டைபோட இந்திய அரசு அனுமதிக்குமா?
(2)ஒருவேளை இலங்கை ராணுவம் வரமுன்னர் இந்திய ராணுவம் வந்து குண்டு போட்டால் சீமான் என்ன செய்வார்?
(3) இலங்கையிடம் 3 லட்சம் ராணுவ வுPரர் உண்டு. அதைவிட கடல் மற்றும் விமான படைகளும் உண்டு. இதனை 50 ஆயிரம் சிறப்பு படையால் வெல்லமுடியுமா?
(4) இலங்கைக்கு சீனா மற்றும் வல்லரசு நாடுகள் உதவி பரிந்தால் அதனை எப்படி எதிர் கொள்வது?
(5)கச்சதீவை மீட்டு இந்திய தேசிய கொடியை ஏற்றுவதாயின் அதனால் தமிழர்களுக்கு என்ன பயன்?
சீமான் 50 ஆயிரம் படையை அனுப்பி கச்சதீவை மீட்பதிலும் பார்க்க தமிழ்நாட்டை தனிநாடாக்கினால் கச்சதீவு தானாக கிடைக்கும். அதுமட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் விடுதலை கிடைக்கும்.
தமிழ்நாடு விடுதலைக்காக போராட சீமான் தயாரா?
No comments:
Post a Comment