•சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை
இந்திய தூதர் காரணமின்றி எதையும் செய்வதில்லை!
இந்திய தூதர் காரணமின்றி எதையும் செய்வதில்லை!
யாழ் இந்திய தூதர் நடராஜன் எதிர்வரும் 21.10.17 யன்று வன்னியில் விவசாயிகளுடன் கருத்து பகிர்வு என்று செய்தி வந்துள்ளது.
ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் ஏன் கவலைப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
அதுபோல் இந்திய தூதருக்கும் ஏன் திடீரென்று வன்னி விவசாயிகள் மீது அக்கறை ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிவோம்.
யாழ் மருத்துவமனையில் 30 வருடங்களுக்கு முன்னர் 70 க்கு மேற்பட்ட அப்பாவி மக்களை இந்திய ராணவம் படுகொலை செய்த நாள் 21.10.17 ஆகும்.
யாழ் மருத்துமனை முன்பு காந்தி சிலையை நிறுவி அதற்கு முன்னால் அகிம்சை தினத்தை கொண்டாடியும் தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அந்த படுகொலைகளை மறக்க வைக்க முடியவில்லை.
பல்வேறு வழிகளில் மிரட்டியும் தடுத்தும்கூட தமிழ் மக்கள் இறந்த தம் உறவுகளை நினைவு கூர்வதை நிறுத்த முடியவில்லை.
எனவேதான் அதே தினத்தில் வன்னி விவசாயிகளை சந்தித்து இந்திய ராணுவத்தின் படுகொலைகளை திசைதிருப்ப இந்திய தூதர் முயல்கிறார்.
•கேப்பாப்பிலவு மக்கள் 250 நாட்களாக போராடுகிறார்கள்.
•காணாமல் போனவர்களின் உறவுகள் 200 நாட்களாக போராடுகிறார்கள்
•அரசியல் கைதிகள் 23 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்
இவை எதுவும் குறித்து அக்கறை கொள்ளாமல் இருந்த இந்திய தூதர் திடீரென்று வன்னி விவசாயிகள் மீது ஏன் அக்கறை கொள்கிறார்?
இந்திய தூதரின் நிகழ்சிகள் தற்செயலானவை அல்ல. மாறாக அவை இந்திய ஆக்கிரமிப்பிற்கான நன்கு திட்டமிட்ட நிகழ்சி நிரல்களே என்பதை உணர்ந்துகொண்டால் நீயும் என் தோழனே!
No comments:
Post a Comment