•ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய படைவீரர்களால்
வெற்றி கொள்ளமுடியாத ஈழத் தமிழர்களை
ஒரு இந்திய தூதரால் வெற்றி கொள்ள முடியுமா?
வெற்றி கொள்ளமுடியாத ஈழத் தமிழர்களை
ஒரு இந்திய தூதரால் வெற்றி கொள்ள முடியுமா?
நெவர்(NEVER). ஒருபோதும் முடியாது. ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது.
அமைதிப்படை என்னும் பெயரில் ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய படை வீரர்கள் வந்தார்கள்.
அவர்கள் ஜயாயிரத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை கொன்றார்கள்.
600க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்தார்கள். பல கோடி ரூபா சொத்துக்களை சேதமாக்கினார்கள்.
கிட்லர்கூட மருத்துவமனைகள் மீது குண்டு வீசவில்லை. ஆனால் இவர்கள் யாழ் மருத்துவமனையை தாக்கி பல நூற்றுக்கணக்கானோரை கொன்றார்கள்.
ஒரிசா மாநிலத்தில் மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருந்தபோது இந்திய அரசு மாதம் ஒன்றிற்கு 180 கோடி ரூபா வீதம் இரண்டரை வருடங்களாக 5400 கோடி ரூபாவை செலவு செய்து ஈழத் தமிழர் மீதான யுத்தத்தை நடத்தியது.
இத்தனைக்கு பிறகும் ஈழத் தமிழர்களை வெற்றி கொள்ள முடியாத இந்தியபடைகள் தோல்வியுடன் திரும்பின.
ஆனால் இப்போது தனது யாழ் இந்திய தூதர் மூலம் தமிழ் மக்களை வெற்றிகொள்ளவும் தனது ஆக்கிரமிப்பை நிலைநாட்டவும் இந்திய அரசு முயல்கிறது.
கடந்தமாதம் யாழ் வந்த இந்தியபடைத் தளபதி கொல்லப்பட்ட இந்திய படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தற்போது அகிம்சை தினம் என்று கூறி பட்டிமன்றம் நடத்த இந்திய தூதர் ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக தமிழகத்தில் இருந்து புகழ்பெற்ற பேச்சாளர்களை அவர் வரவழைக்கிறார்.
ஒருபுறத்தில், இந்த தூதர் இந்திய படைகளால் யாழ் மருத்தவமனையில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரக்கூடாது என்று உதயன் பத்திரிகையை மிரட்டுகிறார்.
அதுமட்டுமன்றி வல்வையில் இந்திய ராணுவம் மேற்கொண்ட படுகொலைகளை வல்வை மக்கள் நினைவுகூரக்கூடாது என இதே தூதர் தடுக்கிறார்.
தற்போது, உண்ணாவிரதம் இருந்து மரணித்த திலீபனை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இதனைக் குழப்புவதற்காகவே அகிம்சை தினம் என்னும் போர்வையில் பட்டிமன்றங்களை இவ் தூதர் ஏற்பாடு செய்கிறார்.
வடக்கு கிழக்கு எங்கும் 20 காந்தி சிலைகளை நிறுவி அகிம்சை தினம் கொண்டாடும் இந்திய தூதரிடம் நாம் கேட்க விரும்புவது ஒன்றேஒன்றுதான்,
•காந்திக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ஜயா?
•உண்ணாவிரதம் இருந்த திலீபனை கொன்றுவிட்டு அகிம்சைதினம் கொண்டாட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு ஜயா?
•உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதியைக் கொன்றுவிட்டு எப்படி உங்களால் அகிம்சை தினம் கொண்டாட முடிகிறது ஜயா?
•யாழ் மருத்துவமனை மீது குண்டு வீசித் தாக்கிவிட்டு அதன் முன்னால் காந்தி சிலையை எப்படி உங்களால் நிறுவ முடிகிறது ஜயா?
No comments:
Post a Comment