Monday, October 30, 2017

•அரசியல் கைதிகள் விடுதலைகோரி மாணவாத்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!

•அரசியல் கைதிகள் விடுதலைகோரி
மாணவாத்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மக்களிடம் வாக்கு பெற்று பதவி பெற்றவர்கள் தமக்கு சொகுசு வாகனம் மற்றும் சொகுசு பங்களா பெறுவதிலேயே கவனம் செலுத்துவதால் வேறு வழியின்றி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமது அமைச்சுப் பதவிக்காக முதலமைச்சருக்கு எதிராக வழக்கு போட்டவர்கள் இத்தனை வருடமாக இந்த அரசியல் கைதிகளுக்காக ஒரு முயற்சியையும் செய்யவில்லை. எனவேதான் வேறு வழியின்றி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை அரசுக்காக ஜ.நா சென்று தவணை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன இந்த அரசியல் கைதிகளுக்காக ஜனாதிபதியை சந்திக்க விரும்பவில்லை. எனவேதான் வேறு வழியின்றி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தனது இரண்டாவது சொதகுசு மாளிகைக்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ரூபாவை பெற பிரோரணை கொண்டு வந்த சம்பந்தர் அய்யா இந்த அரசியல் கைதிகளுக்காக ஒரு பிரோரணை இதுவரை கொண்டு வரவில்லை. எனவேதான் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இனவாதக்கட்சிகள் என்று இவர்களால் கூறபபடும்; ஜே.வி.பி முன்னிலை சோசலிசக்கட்சி போன்றனகூட கைதிகளை விடுதலை செய்யுமாறு குரல் கொடுக்கின்றன.
இனவாத பிக்குகள் என்று கூறப்படும் மல்வத்தைபீட தேரோக்கள்கூட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இத்தனைக்கு பிறகும்கூட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் பேச்சுவாத்தைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரி பாசாங்கு செய்கிறார்.
அரசியல்கைதிகளை விடுதலை செய்யக்கூட தயாரில்லாத நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் என்று எப்படி நம்புவது?
மாணவர்களை அழைத்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அகிம்சை தினம் கொண்டாடிய யாழ் இந்திய தூதரும்கூட மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் பற்றி வாய் திறக்காமல் இரக்கிறார்.
ஒருவேளை மாணவர்கள் செத்தால் அங்கு ஒரு காந்தி சிலையை நிறுவி மாலை அணிவிக்கலாம் என கணக்கு போடுகிறாரோ தெரியவில்லை.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் மாணவர்கள் ஆரம்பித்துள்ள இந்த போராட்டம் தமிழ் தலைமைகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. மாறாக அகிம்சைப் போராட்டத்தால் பயனில்லை என்பது உணரப்படப் போகிறது.
மாணவர்களே! வாழ்த்துக்கள். தீ பரவட்டும்.
குறிப்பு- மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் ஜனாதிபதியுடன் பேசுவதற்காக தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. விபரம் கீழே பின்னூட்டத்தில் உள்ளது.

No comments:

Post a Comment