•யாழ் இந்திய தூதரும்
அம்பாந்தோட்டை இந்திய தூதரும்!
அம்பாந்தோட்டை இந்திய தூதரும்!
இலங்கையில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய நான்கு இடங்களில் இந்திய தூதரங்கள் இருக்கின்றன.
அமெரிக்கா, சீனா உட்பட எல்லா நாடுகளுமே இலங்கையில் ஒரு தூதரகம்தான் வைத்திருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் நலன் கருதி இந்திய தூதரகம் வைக்கப்பட்டது எனில் அம்பாந்தோட்டையில் சிங்களவர்களின் நலனுக்காக வைக்கப்பட்டாதா?
ஆனால் யாழ் இந்திய தூதமர் அப்துல் கலாம் சிலையை நூலகத்தில் வைத்ததுபோன்று அம்பாந்தோட்டை தூதர் அங்கு வைக்கவில்லையே?
யாழ் இந்திய தூதர் யாழ் மருத்துவமனை முன்பு காந்தி சிலையை வைத்து அகிம்சை தினம் கொண்டாடியதுபோல் அம்பாந்தோட்டை தூதர் காந்திசிலை வைக்கவில்லையே?
யாழ் இந்திய தூதர் மருத்துமனைக் கொலைகள் பற்றி எழுதியதற்காக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரை பழி வாங்கியதுபோல் அம்பாந்தோட்டை இந்திய தூதர் பழிவாங்கவில்லையே?
யாழ் இந்திய தூதர் உதயன் பத்திரிகை நிறுவனரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவனை மிரட்டியதுபோல் அம்பாந்தோட்டை இந்திய தூதர் யாரையும் மிரட்டவில்லையே?
1972ல் 2000 ஜே.வி.பி போராளிகளை இந்திய ராணுவம் கொன்றது. அதனை ஜே.வி.பி ஒவ்வொரு வருடமும் நினைவு கூருகின்றது. அதனை அம்பாந்தோட்டை இந்திய தூதர் ஒருபோதும் தடுத்து நிறுத்தியது கிடையாது.
ஆனால் அமiதிப்படை என்று வந்த இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தமது உறவுகளை தமிழ்மக்கள் நினைவு கூர்வதை இந்திய தூதர் மிரட்டி தடுத்து வருகிறார்.
யாழ் இந்திய தூதர் தமது வைபங்களில் பங்கெடுக்குமாறு தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி வருகிறார். ஆனால் அம்பாந்தோட்டை இந்திய தூதர் அவ்வாறு செய்வதில்லையே?
தன்னை தவிர்த்து எந்தவொரு விழாவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறக்கூடாது என்று யாழ் இந்திய தூதர் மிரட்டுகிறார். அனால் அம்பாந்தோட்டை இந்திய தூதர் அவ்வாறு செய்யவில்லையே?
இந்திய ராணுவ தளபதியை அழைத்து வந்து தமிழ் மக்களை கொன்ற இந்திய ராணுவத்திற்கு மரியாதை செய்பகிறார் யாழ் இந்திய தூதர். ஆனால் அம்பாந்தோட்டை தூதர் அவ்வாறு செய்வதில்லையே?
தமிழ் மக்களை இளிச்சவாயர்கள் என்று யாழ் இந்திய தூதர் நினைக்கின்றாரா?
குறிப்பு- அம்பாந்தோட்டையில் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதையடுத்து மகிந்த ராஜபக்சவை இந்தியா அழைத்துள்ளது. டீல் ஓகே என்றால் நாமலின் இந்திய எதிர்ப்பு கைவிடப்படும்.
No comments:
Post a Comment