•எல்லாம் வல்ல ஆண்டவனால்
தன் கோயில் கம்பியூட்டரை திருத்த முடியாதா?
தன் கோயில் கம்பியூட்டரை திருத்த முடியாதா?
இந்தியாவில் மிகவும் செல்வந்த கோயில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும்.
எந்த மதத்தைச் சேர்ந்த ஜனாதிபதியானாலும் பிரதமரானாலும் பதவி ஏற்றதும் முதல் தரிசணம் பெறும் கோயில் இதுவாகும்.
கடந்த வாரம் இந்த கோயிலில் உள்ள கம்பியூட்டர்கள் யாவும் வைரஸ் தாக்குதலால் பழுதடைந்தவிட்டன.
என்னது? எல்லாம் வல்ல ஆண்டவன் ஆலயத்தில் உள்ள கம்பியூட்டரை வைரஸ் தாக்கிவிட்டதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
இந்த கோயில் ஆண்டவனே களவு போய்விடக்கூடாது என்று ஆயுதம் ஏந்திய பொலிசாரால் காவல் காக்கப்படுகின்றது என்பதை அறியும்போது கம்பியூட்டர் பழுதடைந்ததில் என்ன ஆச்சரியம் ஏற்படப்போகிறது.
சரி இப்ப விடயத்திற்கு வருவோம். கம்பியூட்டர் பழுதடைந்ததும் அதை எல்லாம் வல்ல ஆண்டவன் திருத்துவான் என்று கோயில் நிர்வாகம் விட்டுவிடவில்லை.
மாறாக உடனே கம்பியூட்டர் நிபுணர்கள் அழைக்கப்பட்டு பழுதடைந்த கம்பியுட்டர்கள் திருத்தப்பட்டன.
இங்கு எமது கேள்வி என்னவெனில் இந்த ஏழுமலையான் மிகவும் பவர்புல் கடவுள் என்றுகூறி இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்ச மட்டுமன்றி மைத்திரி, ரணில் போன்றவர்களும் எதற்காக அடிக்கடி சென்று வணங்குகிறார்கள்?
தமிழ் பகுதியில் உள்ள இந்து கோயில்கள்; மீது குண்டு விசி தகர்த்தவர்கள் இந்தியா சென்று அதே இந்து கடவுள்களை வணங்குவது என்பது அந்த கடவுள்களை ஏமாற்றும் செயலா அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றும் செயலா?
இங்கு வேடிக்கை என்னவெனில் “மக்கள் மத்தியில் ஆன்மீக நம்பிக்கை குறைவதால்தான் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதாக” பா.ஜ.க செயலர் எச்ச.ராஜா கூறியுள்ளார்.
சரி மக்களுக்கு ஆன்மீக நம்பிக்கை குறைகிறது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் எல்லாம் வல்ல ஆண்டவன் ஏன் அந்த குழந்தையைக்கூட காப்பாற்றாமல் கல்லாக இருந்தார்?
குறிப்பு-
இந்தப் பதிவைப் படித்துவிட்டு சிலர் “ வத்திக்கானில் உள்ள பாப்பரசரின் கம்பியுட்டர் ஏன் பிழைத்தது என்று உங்களால் கேட்க முடியுமா? அல்லது மெக்காவில் அல்லாவின் கம்பியுட்டர் ஏன் பிழைத்தது என்று உங்களால் எழுத முடியுமா? என்று வந்து கேட்பார்கள்.
அவர்களுக்கு இப்பவே பதில் கூறிக்கொள்கிறேன் “என்னுடைய நோய்க்குத்தான் நான் முதலில் மருந்து சாப்பிட முடியும். அதன் பின்பே மற்றவனின் நோய்க்கு மருந்து கொடுக்க முடியும்.”
No comments:
Post a Comment