171 பேரைக் கொன்றவருக்கு 5160 வருடம் தண்டனை
40000 பேரைக் கொன்ற மகிந்தவுக்கு எத்தனை வருடம்?
40000 பேரைக் கொன்ற மகிந்தவுக்கு எத்தனை வருடம்?
1982ம் ஆண்டு கவதமேலா நாட்டில் 171 பேரைக் கொன்ற ராணுவ வீரருக்கு இப்பொது 5160 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
36 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போரில் சுமார் இரண்டு லட்சம் மயா இனத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மான்ட் ஆட்சியில் இருந்தபோது 1982ம் ஆண்டு டாஸ் எரிஸ் என்ற கிராமத்தில் 201 அப்பாவி மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
1996ம் ஆண்டு உள்நாட்டுபோர் முடிவிற்கு வந்தபின் இக் கிராம படுகொலைகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
இந்தப் படுகொலையில் ஈடுபட்ட ராணுவத்தினரில் முக்கியமானவர் முன்னாள் ராணுவ வீரர் சான்டோ லோபஸ். இவர் மீது 171 பேரைக் கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
ராணுவ வீரர் சான்டோ லோபஸ், உள்நாட்டுப் போரைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கைபில் பிரிவைச் சேர்ந்தவர். உள்நாட்டுப் போர் முடிந்த பின் அமெரிக்காவில் பதுங்கி இருந்த சான்டோ லோபஸ் கைது செய்யப்பட்டு கவுதமேலாவுக்கு நாடு கடத்தப்பட்டு அவர் மீது வழக்கு நடந்து வந்தது.
கவுதமேலா நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த எப்ரெயின் ரியாஸ் மான்ட் மீது இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்துவந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்தார்.
இந்த வழக்கில் கவுதமேலா சிட்டி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 171 பேரைக் கொலை செய்த சான்டோ லோபஸக்கு ஒவ்வொருவரையும் கொலை செய்தமைக்காக தலா 30 ஆண்டுகள் வீதம் 5130 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்றதற்காக கூடுதலாக 30 ஆண்டுகளும் என மொத்தம் 5160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இப்போது இங்கு எமக்கு எழும் கேள்வி என்னவெனில் 171 பேரைக் கொன்றவருக்கு 5160 வருடம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 40000 தமிழ் மக்களைக் கொன்ற மகிந்தவுக்கு விசாரணை கூட நடைபெறவில்லையே. அது ஏன்?
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறுவதற்கு மாயா இனத்தில் ஒரு சுமந்திரன் இல்லை.
இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவை “இலங்கையின் தேசியதலைவா” என்று புகழும் சம்பந்தர் அய்யா மாயா இனத்தில் இல்லை.
இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவை “இலங்கையின் தேசியதலைவா” என்று புகழும் சம்பந்தர் அய்யா மாயா இனத்தில் இல்லை.
குறிப்பு- 171 பேரின் படுகொலைக்கு 36 வருடங்கள் கழித்து மாயா இன மக்களால் நீதியை பெற்றிருப்பது 40000பேரின் படுகொலைக்கு உரிய நீதியை பெற முடியும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு தருகிறது
No comments:
Post a Comment