•பூனை கறுப்பா வெள்ளையா என்பதல்ல
அது எலியைப் பிடிக்கிறதா என்தே முக்கியம்!
அது எலியைப் பிடிக்கிறதா என்தே முக்கியம்!
ரணிலா அல்லது மகிந்தவா என்பது தமிழருக்கு முக்கியம் இல்லை. மாறாக யார் தமிழருக்கு தீர்வு தருவார் என்பதே முக்கியம்.
மகிந்த தனது ஆட்சிக் காலத்தில் தமிழர்களை இனப் படுகொலை செய்தது மட்டுமல்ல தமிழருக்கு எந்த தீர்வையும் தரவில்லை.
அதனால்தான் மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு மைத்திரியையும் ரணிலையும் ஆட்சியில் அமர்த்த தமிழ் மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோன்று மைத்திரியும் ரணிலும் சேர்ந்து புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை தயாரித்தனர். தமிழ் மக்களுக்கான தீர்வும் அதில் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்தனர்.
ஆனால் தீர்வை முன்வைக்கும் நேரத்தில் வழக்கம்போல் அதை குழப்பிவிட்டனர். தற்போது மீண்டும் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
அதுமட்டுமல்ல மகிந்த தீர்வு தருவார் என்று மீண்டும் நம்பும்படி தமிழ் மக்களிடம் அவர்கள் கோருகின்றனர்.
சரி, அப்படியென்றால் தீர்வு தருவதாக எழுத்தில் உறுதியளிக்கும்படி கோரினால் அதற்கு சம்மதிக்க மறுக்கின்றனர்.
இப்படியே மாறி மாறி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனேரே யொழிய யாரும் இதுவரை தீர்வை தரவில்லை.
ஒரு பத்திசாலி பூனை கறுப்பா அல்லது வெள்ளையா என பார்க்கமாட்டான். அது எலி பிடிக்குமா என்றே பார்ப்பான்.
அதேபோன்று கொஞ்சமாவது சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ள எந்தவொரு தமிழனும் மகிந்தவும் ரணிலும் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்வான்.
மகிந்த, ரணில், மைத்திரி யாருமே தீர்வு தர மாட்டார்கள் என்றால் அப்ப யார்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு தருவார்கள்?
பாராளுமன்றம் என்பது லெனின் கூறியது போல் பன்றி தொழுவமே. இதில் உழலும் எந்தப் பன்றிகளும் தமிழ் மக்களுக்கு தீர்வு தரப் போவதில்லை.
1948 முதல் இதையே நாம் கண்டு வருகிறோம். பாராளுமன்றத்தை நம்பினால் இனியும் இதுவே வரலாறாக இருக்கப் போகிறது.
கெஞ்சிப் பெறுவதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. மாறாக இது போராடிப் பெறுவது. போராடுவோம்!
No comments:
Post a Comment