•ஏழு தமிழர் விடுதலையை
இனத்தின் விடுதலையாக மாற்றுவோம்!
இனத்தின் விடுதலையாக மாற்றுவோம்!
இதோ படத்தில் இருப்பவர் சிங்கள கடற்படை சிப்பாய் விஜய முனி. இவர் ராஜீவ் காந்தியை கொல்வதற்காகவே தாக்கினேன் என்று கூறினார்.
இருந்தும் அப்போதைய சிறீலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா நீண்டநேரம் வெய்யிலில் நின்றதால் அச் சிப்பாய் மூளை தடுமாறி தாக்கியதாக கூறினார்.
ஆனாலும் அடுத்து வந்த ஜனாதிபதி பிரேமதாசா அச் சிங்கள சிப்பாயை மன்னித்து சிறையில் இருந்து விடுதலை செய்தார்.
அவரை எப்படி விடுதலை செய்யலாம் என்று இந்திய அரசும் கேட்கவில்லை. ராஜீவ் குடும்பமும் கேட்கவில்லை.
ஆனால் உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசு கூறியும்கூட எழு தமிழரை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்.
தமிழக மக்கள் கொட்டும் மழையில் சயிக்கிள் ஊர்வலம் சென்று கேட்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சல் அட்டை அனுப்பிக் கேட்டார்கள்.
ஆனாலும் ராஜீவ் மரணத்தின் போது இறந்தவர்களின் குடும்பங்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் அடம் பிடிக்கிறார்.
முதலில் ராஜீவ் காந்தி குடும்பத்தின் கருத்து கேட்க வேண்டும் என்றார்கள். அக் குடும்பம் விடுதலை செய்யலாம் என்று கூறியவுடன் இப்போது மரணமடைந்த மற்றவர்களின் குடும்பத்திடம் கருத்து கேட்க வேண்டும் என்கிறார்கள்.
இறந்த மற்றவர்களை கொல்லும் நோக்கம் இருக்கவில்லை என்று நீதிமன்றமே கூறிய பின்பும் எதற்காக அந்த குடும்பங்களிடம் கருத்து |கேட்க வேண்டும்.
இப்படியே போனால் இனி அடுத்து குண்டு வெடித்தபோது தூரத்தில் நின்ற நாய் ஒன்று அதிர்ச்சியில் செத்து விட்டது. எனவே அதன் உரிமையாளரிடமும் கேட்க வேண்டும் என்று ஆளுநர் கூறுவார் போல் இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் சிங்கள சிப்பாய்க்காக பேசுவதற்கு ஒரு ஜனாதிபதி பிரதமர் அவருக்கு இருந்தார்கள். ஆனால் தமிழனுக்கு இப்படி கேட்க யாரும் இல்லை.
தமிழனுக்கு தலைவர்கள் என்று இருந்தவர் எல்லாம்’ தம் பதவிக்காக மண்டியிடுபவர்களாக இருந்தனேரேயொழிய ஒருவர்கூட தமிழனுக்காக நிமிர்ந்து நின்று நியாயம் கேட்கவில்லை.
இனி கெஞ்சிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எழுவரை விடுதலை செய்ய நாமே முயல வேண்டும்.
இந்த எழுவர் விடுதலையை இனத்தின் விடுதலையாக மாற்ற வேண்டும். அது ஒன்றே இனி அவர்கள் விடுதலைக்கு வழி செய்யும்.
No comments:
Post a Comment