Thursday, November 29, 2018

ஓ மரணித்த வீரனே!

ஓ மரணித்த வீரனே!
உன் சீருடைகள் எனக்கு வேண்டாம்
உன் காலணிகளும் எனக்கு வேண்டாம்
உன் ஆயுதங்களும் எனக்கு வேண்டாம்
உன் போட்டோ ஒன்றை மட்டும் தா
விரைவில் எலெக்சன் வரும்போல கிடக்கு
எனக்கு வயதும் 86 ஆகுது.
கண்ணும் தெரியுதில்லை
காதும் கேட்குதில்லை
ஒருவர் உதவியின்றி நடக்கவும் முடியவில்லை
அப்புறம் என்ன மயிருக்கு
பதவியில் இருக்கிறாய் என்று
நீ நினைப்பதும் எனக்கு புரியுது.
என்ன செய்வது?
பதவி இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை
இரண்டு பங்களா இல்லாமல் வாழ முடியவில்லை
சிங்கள பொலிஸ் பாதுகாப்பின்றி நடமாடுவதை
என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை
நான் ஜனநாயகத்தை காக்க ஓடித் திரிவதாக
எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கினம்- ஆனால்
நான் என் பதவியைக் காக்க ஓடித் திரியிறன்
என்பது உனக்கு மட்டும்தானே புரியும்
என் பதவி தொடரும் என்று நம்பி
துபாயில் பிசினஸ் செய்த மகனும்
கொழும்பிற்கு வந்து விட்டான்.
கேரளாவில் வாழ்ந்து வந்த மகளும்
இப்ப என் கொழும்பு பங்களாவில்
நான் என் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க
எனக்கு பதவியும் பங்களாவும் வேண்டும்
மரணித்த மாவீரனே!
மாவீரர் விழாவிற்கு என்னால் வர முடியவில்லை
இந்திய தூதரின் விருந்திற்கு நான் போக வேண்டும்
தம்பி சிறீதரனை அனுப்பி வைக்கிறேன்
மறக்காமல் உன் போட்டோவை கொடுத்து அனுப்பிவிடு
அடுத்த தேர்தலிலும் வென்று பதவி பெற உதவிடு!
இப்படிக்கு
உன்னால் தொடர்ந்து பதவி பெற்றிடும்
உனது (நன்றி மறந்த) சம்பந்தர் அய்யா

No comments:

Post a Comment