•லைக்காவின் பண உதவி
ரஜனியின் படத்திற்கான இன்னொரு முதலீடே!
ரஜனியின் படத்திற்கான இன்னொரு முதலீடே!
லைக்கா நிறுவன முதலாளி சுபாஸ்கரன் அவர்கள் புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபா கொடுத்துள்ளார் என்று முகநூலில் செய்தி பகிர்கிறார்கள்.
உண்மையில் அவர் இந்த பணத்தை பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீது அக்கறையில் கொடுக்கவில்லை.
மாறாக ரஜனியை வைத்து தான் எடுக்கும் படத்தின் இன்னொரு முதலீடாகவே இதனை செய்துள்ளார்.
அவர் ரஜனியை வைத்து 2.0 படத்தை 500 கோடி ரூபா செலவில் எடுத்து வருகிறார்.
இதுவரை தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் என்றுகூட சொல்லாம். யாரும் இந்தளவு செலவில் படம் எடுக்கவில்லை.
இந்நிலையில் ரஜனி அவர்கள் அண்மையில் ஏழு தமிழர்கள் குறித்து கூறிய கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
மக்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்த கோபம் தன் படத்தை பாதித்துவிடுமோ என்று லைக்கா நிறுவன முதலாளி அஞ்சுகிறார்.
ஏனெனில் காலா படம் வெளியான போது தூத்துக்குடியில் இறந்த தமிழர்களை சமூகவிரோதிகள் என்று கூறி அப் படத்தின் படுதோல்விக்கு ரஜனி காரணமாக இருந்தார்.
அதுபோல் இந்தப் படத்திற்கும் ரஜனியின் பேச்சு தோல்வியைக் கொடுத்துவிடும் என அவர் அஞ்சுகிறார்.
அதனால்தான் தமிழக மக்களை சமாதானப்படுத்தும் நோக்கில் புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாவினை கொடுத்துள்ளார்.
லைக்கா நிறுவன முதலாளி ஒரு ஈழத் தமிழர். இவர் உண்மையில் மனிதாபிமானத்தோடு உதவுபவராக இருந்தால் புயலால் பாதிக்கப்பட்ட ஈழ அகதிகளுக்கே இந்த பணத்தை கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் தமிழக மக்களிடமிருந்து 600 கோடி ரூபாவைப் பெறுவதற்காகவே இந்த ஒரு கோடி ருபாவை தமிழக மக்களுக்கு கொடுத்துள்ளார்.
லைக்கா முதலாளி ரஜனிக்கும் காப்ரேட் கம்பனிக்கும் கொடுத்த 500 கோடி ரூபா பணத்தை தமிழக மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்.
தமிழக மக்கள் புயல் நிவாரண நிதியாக பெற்ற ஒரு கோடி ரூபாவிற்காக 600 கோடி ரூபாவை கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
இது புரியாமல் சில வெங்காயங்கள் லைக்கா முதலாளி தமிழருக்கு ஒரு கோடி ரூபா கொடுத்துள்ளார் என்று எழுதிக் கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment